இந்தியாவில் புதிய JBL ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது ஹர்மன்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி மற்றும் ஹர்மன் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து சமீபத்தில் JBL பார்ட்டிபாக்ஸ் 200 மற்றும் JBL பார்ட்டிபாக்ஸ் 300 ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் புதிய JBL ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது ஹர்மன்

JBL பார்ட்டிபாக்ஸ் 200 ஸ்பீக்கர்கள் 32,499 ரூபாய் விலையிலும், JBL பார்ட்டிபாக்ஸ் 300 ஸ்பீக்கர்கள் 35,999 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர்களை இணையதளத்திலும் ரீடெயில் சேனல்கள் மூலமாகவும் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த ஸ்பீக்கர்கள் இந்தியாவில் உள்ள 350 சாம்சங் பிராண்ட் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றும் ஹர்மன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய JBL ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்தது ஹர்மன்

ரீசார்ஜ் செய்யும் பேட்டரியுடன் கூடிய பார்டிபாக்ஸ் 300 ஸ்பீக்கர்கள் 18 மணி நேரம் வரை பிளேடைம் கொண்டதாக இருக்கும், மேலும், இந்த ஸ்பீக்கர்களை 12V DC சோர்ஸ் அல்லது பில்ட்-இன் 10,000mAh பேட்டரி மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். நீண்ட சத்தம், இரண்டு ஸ்பீக்கர்கள் கனெக்ட் செய்யப்பட்ட ஆம்பிளிபயர் பொருத்தி கேட்கும் எக்பீரியன்ஸ் கிடைக்கும். பார்ட்டிபாக்ஸ் ஸ்பீக்கர்களில் USB இன்புட் உள்ளதால், யாரும் எளிதாக தங்கள் பிளே லிஸ்ட்டை USB டிரைவ் வழியாக பிளே செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.