நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம், இந்தியா உட்பட சர்வதேச அளவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடலை ஜூன் 6ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது.

தாய்வானில் நோக்கியா எக்ஸ்71 என அறியப்படுகின்ற நோக்கியாவின் மொபைல் போனில் பல்வேறு சிறப்புகளை பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

நோக்கியா 6.2 மொபைல் போன்

48 மெகாபிக்சல் சென்சார் பெற்ற கேமரா மொபைல் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மொபைல் போனில் டிரிப்ள் கேமரா செட்டப் பெற்றதாக அமைந்திருக்கும்.

6.39 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்று  ஸ்னாப்டிராகன் 660 பிராசெஸருடன் கூடிய இந்த மொபைலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பை பெற்றதாக விளங்குகின்றது. ZEISS ஆப்டிக்ஸ் ஆதரவை பெற்றதாக வரவுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், கூடுதலாக 8 மெகாபிக்சல் 120 டிகிரி கோ அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றிருக்கும்.

செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் ஆதரவுடன் கூடிய 16 மெகாபிக்சல் சென்சார் முன்புறத்தில் இடம்பெற்றிருக்கும். 3,500mAh பேட்டரி கொண்ட இந்த போனின் ரூபாய் 20,000 விலைக்குள் அமைந்திருக்கும் என கருதப்படுகின்றது.