நோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக ஆண்டராய்டு இயங்குதளத்தில் செயல்படும் நோக்கியா மொபைல்கள் வரிசையில் புதிதாக நோக்கியா X என்ற பெயரில் நோக்கியா 10 ஸ்மார்ட்போன் சீனாவில் ஏப்ரல் 27ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நோக்கியா X ஸ்மார்ட்போன்

சீனாவில் உள்ள மல்டிபிளெக்ஸ் மால்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் வாயிலாக வெளியாகி தகவலின் அடிப்படையில் நோக்கியா X போன் ஏப்ரல் 27ந் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. ஆனால் இது குறித்து ஹெச்எம்டி குளோபல் எவ்விதமான அதிகார்வப்பூர்வ  தகவலையும் வெளியிடவில்லை.

முதன்முறையாக நோக்கியா X போன் 2014 ஆம் ஆண்டு முதல் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ஜெல்லி பீன் வெர்ஷசனில் இயங்கினாலும் பின்புலத்தில் விண்டோஸ் இயங்குதளம் முக்கிய பங்காற்றியது. மேலும் இந்த மாடலில் பிளே ஸ்டோர் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த முறை நோக்கியா 10 மிக தூய்மையான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அனுபத்தை வழங்கவல்லதாக வரவுள்ளது.

புதிதாக வரவுள்ள நோக்கியா X பற்றி எவ்விதமான நுட்ப விபரங்களும் வெளிவராத நிலையில் இது உயர்ரக ஸ்மார்ட்போன் மாடலாக இருக்குமா அல்லது நடுத்தர ரக ஸ்மார்ட்போன் மாடலாக இருக்குமா என எவ்விதமான உறுதியான தகவலும் கிடைக்கப் பெறவில்லை. எனவே காத்திருங்கள் விரைவில் பல தகவல்கள் வெளியாக கூடும்.