ரூ.11,999க்கு ஹானர் 10 லைட் போனில் 3 ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹானர் 10 லைட் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டு 11,999க்கு விலையில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஹானர் 10 லைட் போனில் 4 ஜிபி ரேம் , 6 ஜிபி ரேம் என இரு மாடல்களில் கிடைக்கின்றது.

4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஹானர் 10 லைட் விலை ரூபாய் 13,999 மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பை பெற்ற மாடல் ரூபாய் 17,999 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஃபிளிப்கார்டில் பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

ஹானர் 10 லைட்டில் Kirin 710 சிப்செட் பெற்றதாக 3 ஜிபி ரேம் , 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டதாக 32 ஜிபி சேமிப்பு மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை பெற்றதாக கிடைக்கின்றது. 13 எம்பி சென்சாருடைய கேமராவுடன், 2 எம்பி சென்சாருடன் விளங்குகின்றது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 24 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

3400mAh பேட்டரி கொண்ட இந்த போனில் 6.21-inch திரையை பெற்று 2340 x 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டுள்ளது.

Honor 10 Lite specifications

 • 6.21-inch (2340 x 1080 pixels) Full HD+ 19:5:9 2.5D வளைந்த டிஸ்பிளே
 • ஆக்டோ கோர் Kirin 710 12nm (4 x 2.2GHz  Cortex-A73 +4 x 1.7GHz Cortex-A53) உடன் ARM Mali-G51 MP4 GPU
 • 3GB ரேம், 32GB சேமிப்பு வசதி, 4GB / 6GB ரேம் 64 சேமிப்பு வசதி,
 • 256GB மைக்ரோ எஸ்டி கார்டு
 • Android 9.0 (பை) உடன் EMUI 9.0
 • ஹைபிரிட் டுயல் சிம்
 • 13MP ரியர் கேமரா f/1.8 எல்இடி ஃபிளாஷ், செகன்ட்ரி 2MP ரியர் கேமரா
 • 24MP செல்பி கேமரா f/2.0 aperture
 • அளவுகள்: 154.8×73.64×7.95mm; Weight: 162g
 • கைரேகை சென்சார்
 • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 4.2 LE, GPS + GLONASS
 • 3400mAh பேட்டரி