இந்தியாவில் ஹானர் 10 லைட் மொபைல் வெளியானது : Honor 10 Lite

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற இரட்டை கேமரா கொண்ட ஹானர் 10 லைட் மொபைல் போன் ரூ. 13,999 விலையில் விற்பனைக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஹானர் 10 லைட்

4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. என இருவிதமான ரேம் மாறுபாட்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ள ஹானர் 10 லைட் மொபைல் விற்பனை ஜனவரி 20ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு விற்பனைக்கு தொடங்கப்பட உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மிக நேர்த்தியான கருப்பு, நீலம் மற்றும் ஸ்கை ப்ளூ என மொத்தம் மூன்று விதமான நிற மாறுபாட்டில் கிடைக்கின்ற , இந்த போனில் பின்புற கவர் மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 10 லைட் மொபைல் போன் 6.21 அங்குல HD+ (1080×2340 pixels) திரையை பெற்ற இந்த போனில் பாடி விகிதாசாரத்துடன் ஒப்பீடுகையில் 91 சதவீதம் ஆகும். மொபைல் வெளிச்சம் கண்களை பாதிக்காத வகையில் TUV-certified பெற்றதாக வந்துள்ளது.

பிராசெஸர் & ரேம்

ஹானர் 10 லைட்டில் இந்நிறுவனத்தின் 12nm முறையில் தயாரிக்கப்பட்ட HiSilicon Kirin 710 SoC சிப்செட் பயன்படுத்தப்பட்டு இதன் உடன் இணைக்கப்பட்ட 4 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி.  LPDDR4X RAM உடன் 64 ஜி.பி. உள்ளடக்க மெமரி பெற்றதாக விளங்குகின்றது. மிக விரைவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைலில் ஜி.பி.யூ. டர்போ 2.0 நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத நுட்பத்தின் மிகச்சிறப்பான கேமிங் அனுபவத்தை இந்த மொபைலில் பெறலாம்.

இந்தியாவில் ஹானர் 10 லைட் மொபைல் வெளியானது : Honor 10 Lite

கேமரா

செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறனை பெற்றுள்ள இந்த மொபைல் கேமரா ஃபேஷியல் உணர்ந்து செயல்படுவதுடன், மிக சிறந்த முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய 8 பிரிவுகளில் (sky, beach, plant, flower, stage, night, room, and snow) 200க்கு மேற்பட்ட மாறுதல்களை கொண்ட படங்களை பெற உதவுகின்றது.

பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்டு 13 மெகாபிக்சல் பிரைமரி மற்றும் 2 மெகாபிக்ல் செகன்டரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பிரத்தியேகமா செல்ஃபீக்கு என 24 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 9.0 பை அம்சத்தை பெற்ற ஹானர் EMUI 9.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த மொபைல் போனில்  3,400mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மற்றவை

512 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தும் திறன் கொண்ட இந்த மொபைலில் ப்ளூடூத், 4ஜி VoLTE, Wi-Fi மற்றும் GPS அம்சத்துடன் இரு சிம் கார்டு ஆதரவை கொண்டுள்ளது.

இந்தியாவில் ஹானர் 10 லைட் மொபைல் வெளியானது : Honor 10 Lite

ஹான்ர் 10 லைட் விலை

ஹானர் 10 லைட் 4ஜிபி/64ஜிபி – ரூ.13,999

ஹானர் 10 லைட் 6ஜிபி/64ஜிபி – ரூ.17,999

சிறப்பு அறிமுக சலுகை

வரும் ஜனவரி 20ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள Honor 10 lite மொபைல் அறிமுக சலுகையாக ரூ.2,200 மதிப்புள்ள ஜியோ கேஸ்பேக் ஆஃபர் மற்றும் ரூ.2,800 மதிப்புள்ள  கிளியர்டிரிப் வவுச்சர் பெறலாம்.

ஜனவரி 20,2019 முதல் இந்த மொபைல் போன் விற்பனை ஃபிளிப்கார்ட் மற்றும் HiHonor ஸ்டோரில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும்.