ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ , ஹானர் 20i

ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ மற்றும் ஹானர் 20i என வாவே ஹானர் பிராண்டில் மூன்று ஸ்மாட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷான மற்றும் பல்வேறு நவீன டெக் வசதிகளை உள்ளடக்கியதாக ஹானர் 20 சீரிஸ் விளங்குகின்றது.

வாவே நிறுவனம், குவாட் கேமரா செட்டப் பெற்ற டாப் ஹானர் 20 ப்ரோ மாடலில் 22.5W விரைவு சார்ஜிங் திறனுடன் கூடிய 4000 எம்ஏஹெச் பேட்டரியை வழங்கியுள்ளது.

ஹானர் 20 சீரிஸ் சிறப்புகள் மற்றும் விலை பட்டியல்

மூன்று ஸ்மார்ட்போன்களும் நவீனத்துவமான வசதிகளுடன் போட்டியாளர்களை விட மிக சிறப்பான கேமரா அனுபவத்தினை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹானர் 20 ப்ரோ சிறப்புகள்

உயர்தர ஹானர் 20 சீரிஸ் மாடலாக விளங்கும் 20 புரோவில் நான்கு கேமரா செட்டப் பெற்றதாக விற்பனைக்கு வந்துள்ளது. 48 எம்பி உடன் சோனி IMX586 சென்சார், 16 எம்பி வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் உட்பட 2 எம்பி மேக்ரோ லென்ஸ் பெற்றுள்ள இந்த மொபைலில் உயர்தரமான கேமரா புகைப்படங்களை பெற இயலும்.

6.26 அங்குல டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல்ஸ் பெற்ற இந்த போனினை இயக்க Kirin 980 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு கொடுக்கப்பட்டுள்ளது அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் விரைவு சார்ஜிரினை பெறாத ஹானர் 20 ப்ரோ மாடலில்  4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஹானர் 20 ப்ரோ மாடல் ரூ.39,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு கிடைக்கின்ற தேதி பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

Honor 20, Honor 20i, Honor 20 Pro

ஹானர் 20 சிறப்புகள்

நடுத்தர ரக மாடலாக விளங்கும் ஹானர் 20 மாடலில் Kirin 980 சிப்செட் பெற்று 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு கொடுக்கப்பட்டு, கூடுதலாக விரிவுப்படுத்த எஸ்டி கார் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

கேமரா பிரிவில் குவாட் கேமரா செட்டப் பெற்ற இந்த மாடல்  ஹானர் 20 மாடலில் 48 மெகாபிக்சல் கேமராவில் சோனி IMX586 சென்சார், 16 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் உட்பட 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பெற்றுள்ளது. அடுத்தபடியாக, செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிகளுக்கு என 32 எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளது.

6.26 அங்குல டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல்ஸ் பெற்ற இந்த போனில் அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 5.0 உள்ளிட்ட அம்சங்களுடன் 22.5 வாட்ஸ் விரைவு சார்ஜிரினை பெறாத ஹானர் 20 மாடலில்  3,750mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஹானர் 20 மாடல் ரூ.32,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் வலைதளத்தில் ஜூன் 25 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Honor 20, Honor 20i, Honor 20 Pro launched price in india

ஹானர் 20i சிறப்புகள்

ஹானர் 20 வரிசையின் குறைந்த விலை மாடலாக வந்துள்ள 20ஐ போனில் கேமரா பிரிவில் டிரிப்ள் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. பிரைமரி கேமரா ஆப்ஷனில் ஏஐ திறனை பெற்ற இந்த கேமராக்களில் 24 மெகாபிக்சல் சென்சாருடன் f/1.8 துவாரம், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சாருடன், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிகளுக்கு என 32 எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளது.6.21 அங்குல டிஸ்பிளே கொண்ட 1080×2340 பிக்சல்ஸ் பெற்ற இந்த போனினை இயக்க Kirin 710 சிப்செட் வழங்கப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பை பெற்றுள்ளது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக  512GB வரை விரிவுப்படுத்தலாம்.

அடிப்படை வசதிகளாக 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்களுடன் விரைவு சார்ஜிரினை பெறாத ஹானர் 20i மாடலில் 3,400mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.14,999 விலையில் கிடைக்கின்ற ஹானர் 20ஐ மாடல் ஜூன் 18 முதல் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக கிடைக்க உள்ளது.