honor-20-series-launch

சீனாவின் ஹுவாவே நிறுவனத்தின் துனை பிராண்டாக செயல்படும் ஹானரின் புதிய 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மே 21 ஆம் தேதி லண்டனில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதை தனது டீசர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹானர் 20 வரிசையில் இடம்பெற உள்ள மொபைல் போன் மாடல்கள் ஹானர் 20, ஹானர் 20 ப்ரோ, ஹானர் 20C  மற்றும் ஹானர் 20x போன்றவை ஆகும். அறிமுக தேதி குறித்தான டீசரை ஹானர் வெளியிட்டுள்ளது.

ஹானர் 20 சீரிஸ் ரீலிஸ் தேதி விபரம்

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஹானர் 10 சீரிஸ் வெற்றியைத் தொடர்ந்து ஹானர் 20 சீரிஸ் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு வெளிவரவுள்ள ஹானர் 20 வரிசையில் டிரிப்ள் கேமரா செட்டப் இடம்பெற்றிருக்கும் என கருதப்படுகின்றது.

ஆனால் ஹானர் வெளியிட்டுள்ள டீசர் படத்தில் அறிமுக தேதியை கண்டுபிடிக்க கொடுக்கப்பட்டுள்ள கணக்கில் 4 என்ற எண்ணை மையமாக கொண்டு 444+4x4x4+(4+4)/4+44/4”  என மொத்தமாக 521 வருவதனால் மே மாதம் (5) 21ந் தேதி என அறியப்படுகின்றது. மேலும் 4 என்ற எண்ணை கொண்டிருப்பதனால் ஹுவாவே பி30 சீரிஸ் போல குவாட் கேமரா செட்டப் பெற்று ஹுவாயின்  கிரின் 980 சிப்செட் கொண்டு 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 3,650mAh பேட்டரி பெற்றதாக இருக்கும் என கருதப்படுகின்றது.

ஹானர் 20 வரிசை 8 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் பெற்றிருக்கலாம். மேலும் ஹானர் 20 வரிசை தொடக்க விலை ரூ.30,000 என தொடங்கலாம் என கருதப்படுகின்றது.