ஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் புதிய ஹானர் 7A மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஹானர் 7A மொபைல் விலை ரூ.8,999 மற்றும் ஹானர் 7C ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ.9,999 ஆகும்.

ஹானர் 7A

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் 7A மற்றும் ஹானர் 7சி ஆகிய இரு மொபைல்களும் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது. மே 29ந் தேதி ஃபிளிப்கார்ட் வாயிலாக ரூ.8,999 விலையில் ஹானர் 7A ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட உள்ளது. மே 31ந் தேதி அமேசான் இந்தியா வாயிலாக ஹானர் 7C விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

5.7 அங்குல ஹெச்டி + தர திரையை கொண்டு 1440×720 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பெற்று குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோ கோர் கொண்டதாக 3ஜிபி ரேம் பெற்று 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வழங்கப்பட்டு இரட்டை கேமராவை பின்புறத்தில் கொண்டுள்ள ஹானர் 7ஏ போனில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை சிம் கார்டு ஆதரவுடன் கூடிய ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய EMUI 8.0 கஸ்டம் இயங்குதளத்தை கொண்டுள்ள 7ஏ மொபைலில் கைரேகை சென்சார் ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றுடன் 3,000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

ஹானர் 7A (3GB+32GB) – ரூ.8,999

ஹானர் 7C

ஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

5.99 அங்குல ஹெச்டி + தர திரையை கொண்டு 1440×720 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பெற்று குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டோ கோர் கொண்டதாக 3ஜிபி ரேம் பெற்று 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு பெற்றதாக விளங்குகின்றது.

கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வழங்கப்பட்டு இரட்டை கேமராவை பின்புறத்தில் கொண்டுள்ள ஹானர் 7சி போனில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய DSLR கேமராவுக்கு இணையான படத்தை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை சிம் கார்டு ஆதரவுடன் கூடிய ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய EMUI 8.0 கஸ்டம் இயங்குதளத்தை கொண்டுள்ள 7சி மொபைலில் கைரேகை சென்சார் ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றுடன் 3,000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

ஹானர் 7C (3GB+32GB) – ரூ.9,999

ஹானர் 7C (4GB+64GB) – ரூ.11,999