இன்று விற்பனைக்கு வந்தது ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போன்

ஹூவாய் துணை பிராண்டாக இருக்கும் ஹானர், இந்தியாவில் ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதற்காக HiHonor ஸ்டோர் மற்றும் Flipkart ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஹானர் 7Sன் விலை ரூ.6,999 ஆகும். இதில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

Mobikwik மூலம் வாங்கினால், 15% தள்ளுபடி அதாவது ரூ.2000 வரை சலுகை கிடைக்கும். இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி நெட்வொர்க் சேவையைக் கொண்டுள்ள ஜியோ நிறுவனம், ரூ.2,200 கேஸ்பேக் சலுகை மற்றும் 50ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. ஹானர் சூப்பர் சேல் என்ற பெயரில் காலை 11.45 மணிக்கு ஏற்பாடு செய்தது. அதில் வெறும் ரூ.1க்கு ஹானர் ஸ்மார்ட்போனைப் பெற இயலும்.

ஹானர் 7S மாடலில் 5.45 இஞ்ச் ஹெச்டி+(720×1440 பிக்சல்) TFT முழு டிஸ்பிளே, 18:9 விகிதாச்சார ஸ்கிரீன், 295 ppi பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது. குவாட்கோர் மீடியா டெக் MT676739 SoC பிராசசர், 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்சல் செல்பி கேமரா, எல்.இ.டி பிளாஷ் உள்ளன

Recommended For You