இந்தியாவில் தொடர்கிறது ஹானர் 9 எலைட், ஹானர் 7s, ஹானர் 9i, ஹானர் 10 ஸ்மார்ட்போன்களுக்கான திருவிழா கால ஆப்பர்கள்

ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம் தனது ஹானர் 9 எலைட், ஹானர் 7s, ஹானர் 9i, ஹானர் 10 ஸ்மார்ட்போன்களுக்கான திருவிழா கால ஆப்பர்களுக்கான காலக்கெடுவை இந்தியாவில் அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான், பிளிகார்ட் போன்ற இணைய தளங்களில் விற்பனை செய்து வந்த ஹானர் நிறுவனம், பல்வேறு சலுகையை அறிவித்து இருந்தது. இந்த சலுகையை வரும் 12ம் தேதி வரை நீடித்துள்ளது. இந்த டிஸ்கவுண்டின் படி, ஹானர் 10 மொபைல்கள் 8,000 ரூபாய் குறைந்து 24,999 ரூபாய் விலையிலும், ஹானர் 9 எலைட் 3GB ரேம் / 32GB ஸ்டோரேஜ் வகைகளின் டிஸ்கவுண்ட் விலை 9,999 ரூபாயாகும்.

இந்தியாவில் தொடர்கிறது ஹானர் 9 எலைட், ஹானர் 7s, ஹானர் 9i, ஹானர் 10 ஸ்மார்ட்போன்களுக்கான திருவிழா கால ஆப்பர்கள்

நீடிக்கப்பட்ட ஆப்பர்களின்படி, ஹானர் எலைட் 3GB ரேம்/ 32GB ஸ்டோரேஜ் வகை ஸ்மார்ட்போன்கள் 9,999 ரூபாய் விலையிலும், ஹானர் எலைட் 4GB ரேம்/ 32GB ஸ்டோரேஜ் வகை ஸ்மார்ட்போன்கள் 11,999 ரூபாய் விலையிலும் 3,000 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் விலையிலும் கிடைக்கும். கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 9 எலைட் 3GB ரேம்/ 32GB ஸ்டோரேஜ் வகை ஸ்மார்ட்போன்கள் 10,999 ரூபாய் விலையிலும், 4GB ரேம்/ 64GB ஸ்டோரேஜ் வகை ஸ்மார்ட்போன்கள் 14,999 ரூபாய் விலையிலும் கிடைக்கும்.

தீபாவளி பண்டிகை கால சீசனில் அமேசான், பிளிக்கார்ட் மற்றும் ஹானர் ஸ்டோர்களில் பல்வேறு டிஸ்கவுண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.