ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை

ஹவாய் நிறுவனத்தின் துணை-பிராண்ட் ஹானர் நிறுவனம் இன்று முதல் நான்கு நாட்களுக்கு “ஹானர் டேஸ் சேல்” என்ற பெயரில் தங்கள் போன்களுக்கு சலுகை விலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த போன்களை பிளிப்கார்ட்டில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டில் இன்று முதல் தொடங்கும் இந்த இந்த சலுகை விலை விற்பனை வரும் 21 தேதி வரி தொடர உள்ளது. இந்த சலுகை விற்பனையில் ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் உள்ளடக்கியதாக இருக்கும். இதுமட்டுமின்றி ஹானர் 9 என் போன்கள் ராபின் எக் மற்றும் லான்வ்டர் பெர்பல் என்ற இரண்டு கலர் ஆப்சன்க்ளில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை

பிளிக்கார்ட் “ஹானர் டேஸ் சேல்” -லில், ஹானர் 9 எலைட் 4ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோர்ரேஜ் வகைகளின் விலை 14 ஆயிரத்து 999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி எக்சேஞ்ச் ஆப்பராக 3,000 கிடைக்கும். ஹானர் 10 மாடல் 6ஜிபி/128ஜிபி வகைகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, 27,999 ரோபி விலையில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போனின் உண்மையான விலை 32,999 ரூபாயாகும். நிறுவனத்தின் முதல் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்ற ஹானர் 9ஐ ஸ்மார்ட் போன் சலுகை விலையில் 16,999 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட் போனில் உண்மையான விலை 17,999 ரூபாயாகும்.

ஹானர் 9N 3ஜிபி ரேம்/ 32 ஜிபி ஸ்டோர்ரேஜ் மற்றும் 4ஜிபி ரேம்/ 64 ஜிபி ஸ்டோர்ரேஜ் வகைகள், முறையே 11,999 ரூபாய் மற்றும் 13,999 ரூபாய் விலையிலும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போன்களுக்கான எக்ஸ்சேஞ்ச் ஆப்பர் 1000 ரூபாயாகும்.

ஹானர் 9ஐ, ஹானர் 9 எலைட், ஹானர் 10, ஹானர் 9என் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலையில் விற்பனை

இதுமட்டுமின்றி ஹானர் 9N 4ஜிபி ரேம்/ 64 ஜிபி ஸ்டோர்ரேஜ் வகைகள், தற்போது லாவ்ண்டர் பெர்ப்பல் மற்றும் ராபின் எக் ப்ளு ஆகிய இரண்டு கலர் ஆப்சன்ல்களில் விற்பனையாகி வருகிறது. இதுமட்டுமின்றி ஏற்கனவே உள்ள சப்பஹிர் ப்ளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களிலும் இந்த போன் கிடைக்கும்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 7எஸ் போன்களும் இந்த சேல்-ல் பங்கேற்க உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் 6,999 ரூபாயுடன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைகிறது.