48 மெகாபிக்சல்ஸ் கேமரா பெற்ற ஹானர் வியூ 20 மொபைல் போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் கிடைக்கின்றது.
ஹானர் வியூ 20
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹானர் வியூ 20 மொபைல் போனில் மிக முக்கிய அம்சமாக 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மிக சிறப்பான புகைப்படங்களை பதிவு செய்ய உதவுகின்றது.
Honor View 20 specifications
6.4 இன்ச் முழு ஹெச்டி திரையை பெற்ற 1080 X 2310 தீர்மானத்துடன் ஹானர் வியூ20 மொபைல் போனில் கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் அமைந்துள்ளது. இந்த மொபைல் போனில் HiSilicon Kirin 980 (7 nm) சிப்செட் கொண்டு ஜி.பியூ டர்போ டெக்னாலாஜி 2.0 அம்சத்தை பெற்று 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் என இரு வேறு ரேம் மாறுபாட்டில் கிடைக்கும். இந்த மொபைலின் உள்ளடக்க சேமிப்பு திறன் 6ஜிபி ரேம் உடன் 128GB மற்றும் 8ஜிபி ரேம் உடன் 256GB என வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக ஹானர் வியூ 20 மொபைல் போன் சேமிப்பினை அதிகரிக்க 256GB மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.
அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போனில் செயற்கை நுன்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற 48 மெகாபிக்சல் கேமரா Sony IMX586 சென்சாரை பெற்று இதன் உடன் கூடுதலாக 3D TOF (time-of-flight) லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 3டி TOF வாயிலாக AR, 3D கேமிங், AI கலோரி அறிதல், மற்றும் 3டி வடிவத்தை பெற உதவுகின்றது.
செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்பிற்கு 25 மெகாபிக்சல்ஸ் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இருபக்க கேமராவும் மெஷின் லெர்னிங் மற்றும் ஏஐ நுட்பத்தை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பெற்ற UI 2.0 ஓஎஸ் கொண்ட ஹானர் வியூ 20 மொபைல் பேட்டரி 4,000mAh கொண்டுள்ளது. இதில் 4G VoLTE, வை-ஃபை ப்ளூடூத் உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.
ஹூவாய் ஹானர் 6ஜிபி ரேம் + 128 ஜிபி – ரூ. 37,999
ஹூவாய் ஹானர் 8ஜிபி ரேம் + 256 ஜிபி – ரூ. 45,999
வருகின்ற அமேசான் 30ந் தேதி இரவு 12 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இது தவிர HiHonor ஆன்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி ரீடெயில்களிடம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.