ரூ.29,999 விலையில் ஹானர் வியூ10 மொபைல் அறிமுகம்ஹவாய் நிறுவனத்தின் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.29,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஹானர் வியூ10 அமேசான் இந்தியா வழியாக பிரத்யேகமாக ஜனவரி 8ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளதால் முன்பதிவு தற்போது அமேசானில் தொடங்கப்பட்டுள்ளது.

ஹானர் வியூ10

ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய EMUI 8.0 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் 403ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×2160 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.99 அங்குல முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி முழுகாட்சி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் உடன் இணைந்து 1.8GHz அக்டா கோர் ஹவாய் ஹைசிலிகான் கிரீன் 970 பிராசெஸர் மூலம் இயக்கப்படுகிறது.

இதில் நினைவு திறனை மைக்ரோSD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஹவாய் ஹானர் வியூ 10 ஸ்மார்ட்போனில் f/1.8 அபெர்ச்சர் மற்றும் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.0 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த கைப்பேசியில் 3750mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின்  கூடுதல் விருப்பங்களாக வை-ஃபை 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.20, NFC, இன்ஃப்ராரெட், யூஎஸ்பி OTG-C (2.0), 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.இந்த மொபைல் போனில் அரோரா ப்ளூ, டார்க் நைட், பீச் கோல்ட், சார்ம் ரெட் ஆகிய வண்ண வகைகளில் வருகிறது.

ஒன்பிளஸ் 5டி மொபைலுக்கு எதிராக வந்துள்ள ஹவாய் ஹானர் வியூ 10 மொபைல் விலை ரூ.29,999 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here