HP OMEN X 2S

ஹெச்பி நிறுவனம், பீஜிங்கில் நடைபெற்ற கேமிங் திருவிழாவில் உலகின் முதல் டூயல் ஸ்கீரின் கொண்ட கேமிங் லேப்டாப் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர பெவிலியன் கேமிங் லேப்டாப் ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

வரும் ஜூலை 2019 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய கேமிங் லெப்டாப்களில் குறிப்பாக ஒமென் எக்‌ஸ் 2எஸ் மாடலில் லிக்யூடு மெட்டல் கூலிங் காம்பவுண்ட் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஹெச்பி OMEN X 2S லேப்டாப் சிறப்புகள்

ஹெச்பி கேமிங் திருவிழாவில் OMEN X 2S, OMEN 15, OMEN 17 லேப்டாப் மற்றும் பெவிலியன் கேமிங் 15, பெவிலியன் கேமிங் 17 லேப்டாப் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய ஒமென் மாடல்களை விட 20 சதவீதம் மற்றும் 18 சதவீதம் வரை முறையே OMEN 15 மற்றும் OMEN 17 லேப்டாப்பின் தடிமன் குறைக்கப்பட்டு புதிய ஒமென் டெம்பஸட் கூலிங் நுட்பத்தை பெற்றுள்ளது.

OMEN X 2S லேப்டாப்பில் இரு திரை வழங்கப்பட்டுள்ளது. முதல் டிஸ்பிளே 15 அங்குல 1080p அல்லது 4K டிஸ்பிளேவுடன், இரண்டாவது திரை 1080p தீர்மானத்துடன் 6 அங்குல திரை வழங்கப்பட்டுள்ளது. 20 மிமீ மெட்டல் சேஸி கொண்ட இந்த லேப்டாப் எடை 2.34 கிலோ ஆகும்.

9வது தலைமுறை இன்டெல் கோர் i9 பிராசெஸருடன் கூடிய NVIDIA GeForce RTX 2080 graphics, PCIe SSD, RAID 0 பெற்று 32 ஜிபி DDR4  ரேம் பெற்றுள்ளது. இந்த மடிக்கணினியில் மூன்று USB 3.1 டைப் ஏ போர்ட் , ஒரு தண்டர்போல்ட் 3 USB டைப்-C போர்ட், ஒரு HDMI 2.0 போர்ட், ஜிகாபிட் எத்தர்நெட் போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மடிக்கணினியில் இணைக்கப்பட்டுள்ள ஒமென் டெம்பஸ்ட் கூலிங் (OMEN Tempest Cooling) நுட்பம் என்பபடுவது 3 பக்கங்களில் வென்ட் வழங்கப்பட்டு 5 வழிகளில் ஏர் ஃபளோ ஏற்படுத்த 12 வோல்ட் ஃபேன் மூன்று பேஸ் மற்றும் ஃபுளூயிட் டைனமிக் பேரிங் கொண்டதாக விளங்குகின்றது. இது ஒரு லிக்யூடு மெட்டல் கூலிங் காம்பவுண்ட் நுட்பம் என அழைக்கின்றது. அடுத்தப்படியாக ஸ்கீரின் மிரரிங், மானிட்டரிங், RGB நிறத்தை பராமரிக்க ஒமென் கமென்ட் மையம் (OMEN Command Center) வழங்கப்பட்டுள்ளது.

பெவிலியன் கேமிங் 15, பெவிலியன் கேமிங் 17 லேப்டாப்புகளில் 9வது தலைமுறை இன்டெல் கோர் i5/i7  பிராசெஸருடன்  NVIDIA GeForce GTX 1660 Ti கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

OMEN X 2S கேமிங் லேப்டாப் விலை $2099.99 USD(ரூ. 1,47,350 தோராயமாக.)

OMEN 15 லேப்டாப் விலை $1049.99 USD (ரூ.73,670 தோராயமாக.) மற்றும் ஒமென் 17 லேப்டாப் $1099.99(ரூ. 77,180 தோராயமாக)

பெவிலியன் கேமிங் 17 லேப்டாப் $849.99 USD(ரூ. 59,640 தோராயமாக) மற்றும் பெவிலியன் கேமிங் 15 லேப்டாப் விலை $799.99 USD(Rs. 56,130 தோராயமாக)