htc desire 19+

இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எச்டிசி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பிளிப்கார்ட் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் பெற்ற எச்டிசி டிசையர் 19 + மொபைல் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பாக வெளிவந்துள்ள பல்வேறு தகவலின் படி புதிய ஹெச்டிசி டிசையர் 19 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும், பின்பு 720 x 1520 பிக்சல் உடன் ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளத்தில் செயல்படுவதுடன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் கொண்டு இயங்குகின்ற முறையில் 4 ஜிபி ரேம் உடன் 64ஜிபி 6 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி என மொத்தம இரண்டு வகைகளில் வெளிவரவுள்ளது.

கேமரா பிரிவில் HTC டிசையர் 19+ மாடலில் டூயல் கேமரா செட்டப் பெற்று பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ரா வைடு ஏங்கிள் லென்ஸ் என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் பெற்றதாக வரக்கூடும்.

3,850mAh பேட்டரி ஆதரவுடன் ஜிபிஎஸ், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கூடுதல் ஆதரவுகளை பெற்று ஹெச்டிசி டிசையர் 19+ ஆரம்ப விலை ரூபாய் 21,000 என தொடங்கலாம்.