வருகின்ற நவம்பர் 11ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள எச்.டி.சி U11 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகத்தின் போது ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை பெற்ற எச்.டி.சி U11 லைஃப் மொபைல் போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

எச்.டி.சி U11 லைஃப்

பிரபல எச்.டி.சி லிக்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் முழுமையான எச்.டி.சி U11 லைஃப் கருவியின் நுட்ப விபரங்கள் மற்றும் இயங்குதளத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இருவிதமான ரேம் மற்றும் சேமிப்பு தேர்வுகளில் கிடைக்க உள்ள கருவியில் 3ஜிபி ரேம் 32ஜிபி சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் 64ஜிபி சேமிப்பு பெற்றதாக 5.2 அங்குல திரையுடன் 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக விளங்கும் என கூறப்படுகின்றது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 SoC பெற்ற இந்த மாடலில் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்துடன் ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையாக கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது. கேமரா பிரிவில் 16 மெகாபிக்சல் சென்சார் பெற்ற முன் மற்றும் பின் கேமராக்கள் இடம்பெற்றிருக்கும்.

2600mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 11ந் தேதி விற்பனைக்கு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.