மீண்டும் இந்திய சந்தையில் நுழைந்துள்ள எச்டிசி நிறுவனம், தனது முதல் மாடலாக வைல்ட்ஃபயர் X (HTC Wildfire X) ஸ்மார்ட்போனை ரூபாய் 9,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக வெளியிட்டுள்ளது.
86 சதவீத இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை 5 சீன நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் இவற்றுக்கு போட்டியாக தாய்வானைச் சேர்ந்த ஹெச்டிசி நிறுவனம் களமிறங்கியுள்ளது. உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பெற்ற மொபைலை அறிமுகம் செய்த எச்டிசி-யை கூகுள் கையகப்படுத்தியுள்ளது.
கூகுள் இந்நிறுவனத்தினை கையகப்படுத்தியப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலான வைல்ட் ஃபயர் எக்ஸ் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 6.22 அங்குல எச்டி + டிஸ்ப்ளே கொண்டு 88.8 சதவிகிதம் பாடி டூ ஸ்கீரின் விகிதத்துடன் விளங்குகின்றது. மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா கோர் சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 4 ஜிபி ரேம் வேரியண்ட்டும் உள்ளது. கூடுதலாக சேமிப்பினை விரிவுப்படுத்த மைக்ரோ எஸ்டி அட்டை வழங்கப்படுகின்றது.
வைல்ட்ஃபயர் எக்ஸ் ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடற் மூன்று பின்புற கேமரா அமைப்பை வழங்குகிறது. 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் கேமராவும் உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
வைல்ட்ஃபயர் எக்ஸ் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை கொண்டு 3,300 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ளது. வைல்ட்ஃபயர் எக்ஸ் இந்தியாவில் சபையர் ப்ளூ கலரில் வழங்கப்படுகிறது.
3 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ .9,999 க்கும், 4 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ .12,999 க்கும் கிடைக்கும். இது பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக ஆகஸ்ட் 22, 2019 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்கள் வடிவில் 3,750 ரூபாயை வழங்குகிறது. வோடபோன் ஐடியா பயனர்கள் 18 மாதங்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதல் 0.5 ஜிபி டேட்டா பெற இயலும்.