வரும் பிப்ரவரி 24ந் தேதி சீனாவின் ஹூவாய் போன் தயாரிப்பாளர், 5ஜி மொபைல் போன் ஒன்றை மடிக்ககூடிய வகையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஹூவாய் டெக்னாலாஜிஸ் நிறுவனம், பல்வேறு நவீன ஆக்கப்பூர்வ வசதிகளை வழங்குவதில் சர்வதேச அளவில் மிக தீவரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மொபைல் போன் மாடலான ஹூவாய் பி20 சீரிஸ் சர்வதேச அளவில் முதன்மையாக விளங்கும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. 4ஜி மொபைல் போன் சந்தை மெல்ல இனி 5ஜி மொபைல் போன் சேவையாக மாற தொடங்க உள்ளது.
ஸ்மார்ட்போன் முறையில் அடுத்தப்படியாக மடிக்ககூடிய மொபைல்களை அறிமுகம் செய்ய சாம்சங், லெனோவா, ஷியோமி உள்ளிட்ட பல முன்னோடி நிறுவனங்கள் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் போட்டியாளர்களை விட முனைப்பாக ஹூவாய் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெறுகின்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிட உள்ளதை தனது அதிகார்வப்பூர்வ டிவிட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளது.
கடந்த வருடம் ஹூவாய் நிறுவனம் மேட் F, மேட் ஃபிளெக்ஸ், மேட் ஃபிளெக்சி மற்றும் மேட் ஃபோல்டி போன்ற பெயர்களுக்கு ஐரோப்பிய காப்புரிமை மையத்தில் காப்புரிமை கோரி பெற்றிருந்தது. மடிக்ககூடிய மொபைல்களை மற்ற நிறுவனங்கள் 4ஜி முறையில் வெளியிட உள்ள நிலையில் முதன்முறையாக உலகின் முதல் மடிக்ககூடிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஹூவாய் வெளியிட உள்ளது.
இதுதவிர, MWC 2019 அரங்கில் புதிய பி30 மொபைல் சீரிஸ் போன்கள் உட்பட Kirin 980 SoC சிப்செட் மற்றும் Balong 5000 5G மோடம் ஆகியவற்றை வெளியிட வாய்ப்புள்ளது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் ஹூவாய் தனது புதிய கேட்ஜெட்ஸ்களை பிப்ரவரி 24 ஆம் தேதி மதியம் 2 மணி (இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு) துவங்குகிறது.