மொபைல் வோல்டு காங்கிரஸ் 2019 அரங்கில், ஹூவாய் நிறுவனம் மேட் எக்ஸ் 5ஜி ஃபோல்டெபிள் போனை ரூ. 2,09,400 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் 5ஜி ஆதரவுக்கான உலகின் மிக வேகமான 5ஜி மோடத்தை பெற்றதாக அமைந்துள்ளது.

முழுமையாக மடிக்காத நிலையில் 8 அங்குல காட்சி டெப்ளெட் மோட் திரையை கொண்டிருக்கின்ற மேட் எக்ஸ் போனில் மடித்தால் 6.6 அங்குல ஸ்மார்ட்போன் காட்சி திரைக்கு மாறுவதுடன் பல்வேறு வசதிகள கொண்டுள்ளது.

ஹூவாய் மேட் எக்ஸ் 5ஜி போனின் சிறப்புகள்

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி EMUI 9.1.1 அடிப்படையில் செயல்படுகின்ற ஹூவாய் மேட் எக்ஸ் 5ஜி ஃபோல்டெபிள் மாடலில் மொத்தமாக மூன்று விதமான காட்சி திரை அடங்கியுள்ளது.

முழுமையான தோற்ற அமைப்பாக 8 அங்குல OLED முழு வியூ டிஸ்பிளேவுடன், 2400 x 2000 பிக்செல்ஸ் தீர்மானத்தை கொண்டும், மடித்த நிலையில் முன்பு காட்சி திரை 6.6 அஙுகுலம் உடன் 1148×2480 பிக்சல்ஸ் மற்றும் பின்புறம் 6.38 அங்குலம் 892×2480 பிக்செல்ஸ் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த மொபைலின் மடிக்ககூடிய இடத்தினை உருவாக்க சுமார் 100 உதிரிபாகங்களை பயன்படுத்தி உருவாக்க சுமார் மூன்று வருடங்கள் ஹூவாய் பொறியாளர்களின் உழைப்பு அடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தனது சொந்த HiSilicon Kirin 980 பிராசெருடன் Balong 5000 சிப்செட் பயன்படுத்தி 8 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான 5ஜி மோடமாக விளங்கும் Balong 5000 உலகின் அதிகபட்ச இணைய வேகத்தை 5ஜி முறையில் வழங்கும் வகையில் கட்டமைக்கபட்டுள்ளது. இதன் மூலம் 1 ஜிபி உள்ள திரைப்படம் அல்லது வீடியோவினை டவுன்லோட் செய்ய 3 விநாடி மட்டும் போதுமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் உலகின் முதல் 7nm மோடமாக விளங்குகின்றது.

Leica லென்ஸ்களை கொண்ட இந்த போனில் முன்புறத்தில் நேரடியாக எந்த கேமராவும் வழங்கப்படவில்லை . ஆனால் 40 எம்பி (wide-angle lens), 16 எம்பி (ultra-wide-angle lens), மற்றும் 8 எம்பி (telephoto) சென்சார் இடம்பெற்றுள்ளது.

5G, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, NFC, மற்றும் USB Type-C  உள்ளிட்ட அம்சங்களுடன் 4500mAh பேட்டரி இரண்டு பிரிவாக வழங்கப்படுள்ளது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள 55W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. இதன் மூலம் 0 முதல் 80 சதவீதம் சார்ஜ் ஆக வெறும் 30 நிமிடங்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என குறிப்பிடப்படுள்ளது.