அமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு

சமீபத்தில் லண்டனில் நடந்த விழாவில் ஹவாய் நிறுவனம் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மேட் 20, மேட் 20 புரோ, மேட் 20 X மற்றும் போர்ச் டிசைன் மேட் 20 RS என நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள ஹவாய் நிறுவனம், புதிய மேட் 20 புரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்த தகவல்கள் லண்டனில் நடந்த விழாவில் தெரிவிக்கபடவில்லை. இருந்தபோதும், இந்த போனுக்கான டீசர் பக்கம் அமேசான் இந்தியா இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பக்கத்தில் “notify me” என்ற ஆப்சனும் இடம் பெற்றுள்ளது. இதனால், இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் தேதி, விலை விபரம் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

அமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு

இந்த புதிய ஸ்மார்ட்போன் மூன்று ரியர் கேமராக்களை கொண்டுருக்கும் என்றும், டிவைஸ் எட்-டு-எட் டிஸ்பிளே கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் இதில் 3D ஆழத்தை அறிந்து கொள்ளும் முன்புற கேமராக்களும் உள்ளன. மேலும் இந்த டிவைஸ் ஸ்போர்ட்ஸ் திறனுடனும், அதிவேக சார்ஜிங் முறையையும் கொண்டிருக்கும். இதுமட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

இந்த ஹெட்செட்களில் 6.39 இன்ச் OLED பேனல்களுடன் 3120×1440 பிக்சல் ரெசலுசனையும் கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 19.5:9 அங்குல அளவில் இருக்கும். மேட் 20 புரோ ஸ்மார்ட்போன்கள் ஆக்டோ கோர் ஹிசில்கோன் 980 SoC-ஐ கொண்டிருக்கும். இதுமட்டுமின்றி இந்த டிவைசில், AI திறனை மேம்படுத்தும் நோக்கில் தனித்துவமிக்க NPU பொருத்தப்பட்டுள்ளது. soC-க்கள் 6GB ரேம் மற்றும் 128 GB இன்பில்ட் ஸ்டோராஜ் கொண்டிருக்கும். இருந்தபோதும், இந்த ஸ்மார்ட்போன்களில் மைக்ரோ SD கார்டுகள் மூலம் ஸ்டோராஜ்களை விரிவுபடுத்தி கொள்ள முடியும்.

அமேசானில் வெளியானது ஹவாய் மேட் 20 புரோ டீசர்; இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என அறிவிப்பு

இந்த ஸ்மார்ட் போன்களில், மூன்று கேமராக்கள் உள்ளன. பிரைமரி சென்சார் 40MP களுடன் f/1.8 அப்பசர் கொண்டிருக்கும். செகண்டரி கேமராகள் 20MP சென்சார்க்ளுடம் f/2.2 அப்பசர்களுடன் அல்ட்ரா-அகல கோண லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும். மூன்றாவதாக ஸ்நாபர் 8MP அளவுடன் டெலிபோட்டோ லென்ஸ்களுடன் ஆப்டிகல் ஜூம் கொண்டதாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் 4200mAh பேட்டரிகளுடன் வேகமாக சார்ஜிங் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் வயர்லஸ் சார்ஜிங் திறனுடன் இருக்கும். டூயல் சிம் ஸ்லாட்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், வைபை 802.11ac, GPS மற்றும் ப்ளுடூத், USB டைப் -C மற்றும் IP68 சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் தண்ணீர் மற்றும் அழுக்கால் பாதிக்காது.