ஸ்மார்ட்போன்கள் செயல்பாடுகளை அளவீடு செய்வதில் AnTuTU சிறந்த அப்ளிகேசனாக விளங்கி வருகிறது. இந்த அப்ளிகேஷன் சமீபத்தில் அக்டோபர் மாதத்தில் சிறப்பாக செயல்படும் ஸ்மார்ட்போன்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல், ஹன்ட்செட் எந்த நிலையில் அதாவது கேம்ஸ் விளையாடும் போதும் அல்லது பல்வேறு ஆப்களை பயன்படுத்தும் போது எப்படி செயல்படுகிறது எனது ஆய்வு நடத்தபட்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ஆய்வு முடிவில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பாக செய்லபடும் ஸ்மார்ட்போன்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் மூன்று இடத்தில் ஹைசிலிக்கன் கிரான் 980 Soc ஆற்றலில் இயக்கும் ஹவாய் மேட் 20, மேட் 20 புரோ மற்றும் மேட் 20 x ஸ்மார்ட் போன்கள் இடம் பெற்றுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், கோல்காம் ஸ்நாப்டிராகன் 845 SoC ஆற்றலில் செயல்படும் போன்கள் டாப் 3 பட்டியலில் இடம் பெறவில்லை.

AnTuTu வெளியிட்ட பட்டியலில், ஹவாய் மேட் 20 ஸ்மார்ட் போன்கள் 311,840 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. மேட் 20 புரோ போன்கள் 307,693 மற்றும் மேட் 20X போன்கள் 303,112 மதிப்பெண்கலை பெற்றுள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவதாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி பிளாக் சார்க் ஹீலோ மற்றும் முன்பு வெளியான பிளாக் சார்க் ஸ்மார்ட் போன்கள் முறையே 301,757 மற்றும் 293,544 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகமான மீஜு 16 ஸ்மார்ட்போன்கள் 293,554 மதிப்பெண்களை பெற்றுள்ளது.

ஒன்பில்ஸ் 6 ஸ்மார்ட்போன் 34,999 மதிப்பெண்களையும், சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட் போன் 37,999 மதிப்பெண்கள் பெற்று 7-வது இடத்தில உள்ளன. 8-வது, 9-வது மற்றும் 10-வது இடத்தில் முறையே ஆசுஸ் ROG, ஸ்மர்டிசன் R1 மற்றும் நிம்பா Z18 போன்கள் முறையே 291,701 மதிப்பெண், 291,102 மற்றும் 290,332 மதிப்பெண்களை பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சாம்சங் மற்றும் கூகிள் போன்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மீ மிக்ஸ் 3 மற்றும் ஹானர் மேஜிக் 2 போன்ற போன்களும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இருந்தபோதும் நவம்பர் மாத ஆய்வில் இந்த பட்டியில் ஒனபிளஸ் 6T இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.