உலகின் முதல் 7nm AI சிப் உடன் கூடிய ஹவாய் மேட் சீரிஸ்  அறிமுகமானது

சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளான மேட் 20, மேட் 20 புரோ, மேட் 20x மற்றும் போர்ச் டிசைன் மேட் 20RS ஸ்மார்ட்போன்களை லண்டனில் நடந்த விழாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஹாவய் நிறுவனத்தின் முதல் 5G ரெடி 7nm (நானோமீட்டர்) சிப்செட் கிரின் 980, ஆர்டிபேசியல் இன்டலிஜென்ஸ் திறன் கொண்டதாகும்.

உலகின் முதல் 7nm AI சிப் உடன் கூடிய ஹவாய் மேட் சீரிஸ்  அறிமுகமானது

மேட் சீரிஸ் டிவைஸ்கள் இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதை ஹவாய் நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை. ஹவாய் மேட் 20 ஸ்மார்ட்போன்கள் 4GB ரேம் 128GB ரோம்களுடன் 799 யுரோ விலையிலும், ஹவாய் மேட் 20 ஸ்மார்ட்போன்கள் 6GB ரேம் 128GB ரோம்களுடன் 849 யுரோ விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஹவாய் மேட் 20X ஸ்மார்ட்போன்கள் 6GB ரேம் 128GB ரோம் கொண்ட வகை ஸ்மார்ட்போன்கள் வரும் 26ம் தேதி முதல், 899 யுரோ விலையில் விற்பனைக்கு வர உள்ளது.

உலகின் முதல் 7nm AI சிப் உடன் கூடிய ஹவாய் மேட் சீரிஸ்  அறிமுகமானது

போர்ச் டிசைன் ஹவாய் மேட் 20RS (8GB ரேம் + 256GB ரோம் ஸ்டோரேஜ் வகைகள் ) 1,695 யுரோ விலையிலும், 8GB ரேம் + 512GB ரோம் ஸ்டோரேஜ் வகைகள் 2,095 யுரோகள் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் சூப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 400W ஹை-ஸ்பீட் சார்ஜிங் உடன் வெளியாக உள்ளது.