ஃபோல்டெபிள் போன் மாடலாக விளங்கும் ஹூவாய் மேட் X இந்தியாவில் 5ஜி சேவை ஆரம்பிக்கும் போது விற்பனைக்கு வெளியிடப்படும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. மேட் எக்ஸ் 5ஜி நெட்வொர்க்கில் மட்டும் கிடைக்கும் 4ஜி சேவையில் வழங்கும் நோக்கம் இல்லை என ஹூவாய் அறிவித்துள்ளது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்கில் வெளியான மடிக்ககூடிய போன் மாடலான ஹூவாய் மேட் எக்ஸ் இந்திய சந்தையில் 5ஜி சேவை தொடங்கும்போது அதாவது 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் X முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விபரம்

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு என்ற மாடலை வெளியிட்ட நிலையில் ஹூவாய் நிறுவனம் அசத்தலான பல்வேறு வசதிகளை பெற்ற முழுமையான 8 அங்குல காட்சி திரை கொண்ட மேட் எக்ஸ் மடிக்கும் நிலையில் முன்பக்கம் 6.6 அங்குல டிஸ்பிளே மற்றும் பின்புறம் 6.36 அங்குல திரையை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

HiSilicon Kirin 980 பிராசெருடன் Balong 5000 சிப்செட் பயன்படுத்தி 8 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான 5ஜி மோடமாக விளங்கும் Balong 5000 உலகின் அதிகபட்ச இணைய வேகத்தை 5ஜி முறையில் வழங்கும் வகையில் கட்டமைக்கபட்டுள்ளது. இதன் மூலம் 1 ஜிபி உள்ள திரைப்படம் அல்லது வீடியோவினை டவுன்லோட் செய்ய 3 விநாடி மட்டும் போதுமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் உலகின் முதல் 7nm மோடமாக விளங்குகின்றது.

Leica லென்ஸ்களை கொண்ட இந்த போனில் முன்புறத்தில் நேரடியாக எந்த கேமராவும் வழங்கப்படவில்லை . ஆனால் 40 எம்பி (wide-angle lens), 16 எம்பி (ultra-wide-angle lens), மற்றும் 8 எம்பி (telephoto) சென்சார் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்கா மதிப்பில் ஹூவாய் மேட் எக்ஸ் விலை ரூ.2,09,400 ஆகும். இந்திய சந்தையின் விலை அறிவிக்கபடவில்லை.