huawei-mate-x-

உலகின் மிக வேகமான மடிக்ககூடிய 5ஜி போன் ஹூவாய் மேட் எக்ஸ் (Huawei Mate X) ஃபோல்டெப்பிள் மொபைலாக விளங்கும் என்பதனை குறிக்கும் வார்த்தையுடன் இந்த படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் நாளை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சமீபத்தில் சாம்சங் மொபைல் நிறுவனம் மடிக்கும் முறையிலான 5ஜி மற்றும் 4ஜி ஆதரவை பெற்ற சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற அன்பேக்ட் 2019 சாம்சங் கேலக்‌ஸி எஸ்10 மொபைல் அறிமுகத்தில் காட்சிப்படுத்தியது.

ஹூவாய் மேட் எக்ஸ் எதிர்பாப்புகள் என்ன ?

ஸ்மார்ட்போன் மாடல்களின் அடுத்த தலைமுறையாக மடிக்ககூடிய மொபைல் போன்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சாம்சங் , ஹூவாய், மோட்டோரோலா, எல்ஜி, சியோமி, ஒப்போ, விவோ ஐகியூ என அனைத்து முன்னணி நிறுவனங்களும் மிக தீவரமாக ஈடுப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாளை பார்சிலோனா நகரில் தொடங்க உள்ள மொபைல் வோர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்வில் , இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பை சீனாவின் ஹூவாய் நிறுவனம் நடத்த உள்ளது. இந்த சந்திப்பில் ஹூவாய் நிறுவனம் 5ஜி மொபைல்கள், மடிக்ககூடிய ஸ்மார்டபோன்கள் உட்பட ஹானர் பி30 மாடலும் வெளியாகலாம்.

ஹூவாய் மேட் எக்ஸ் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் முழுமையான திரையில் அதிகபட்சமாக 7.3 அங்குலமாகவும் மற்றும் முழுவதாக மடித்த நிலை என இரு காட்சி திரையை வழங்கலாம் என படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மொபைல் போன் தொடர்பான மற்ற விபரங்கள் இதுவரை வெளியாக வில்லை.

முழுமையான விபரங்கள் நாளை மாலை வெளியாக உள்ளது. எனவே தொடர்ந்து மொபைல் வோல்டு காங்கிரஸ் செய்திகளை படிக்க இந்த பக்கத்தை பின்பற்றுக — MWC 2019 News in TAMIL

பட உதவி – டிவிட்டர்- gimme2pm