Huawei Nova 4e

வாட்டர் டிராப் ஸ்டைல் , மூன்று கேமரா , 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் மாடல்களில் ஹூவாவே நோவா 4e சீன சந்தையில் ரூபாய் 20,700 இந்திய மதிப்பில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.  3,340mAh கொண்டு இயக்கப்படுகின்ற இந்த போனில் மிக சிறப்பான கேமரா ரெக்காடிங் மற்றும் கேமிங் செயல்பாட்டை வழங்க வல்லதாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ஹூவாய் நோவா 4 மாடலின் அடிப்படையில் குறைந்த ரேம் கொண்டதாக நோவா 4இ விளங்குகின்றது. ஹூவாவே நிறுவனம் பி30 சீரிஸ் மொபைல்களை வரும் மார்ச் 26ந் தேதி பாரீஸ் நகரில் விற்பனைக்கு வெளியிடுவதாக உள்ளது. இந்நிலையில் ஹூவாய் நோவா 4e விற்பனைக்கு வந்துள்ளது.

ஹூவாவே நோவா 4e போன் விலை மற்றும் நுட்பவிபரங்கள்

புகைப்படங்களை பதிவு செய்ய இமேஜ் ரெக்காடிங் வசதி மற்றும் ஜிபியூ 2.0 டர்போ முறை வாயிலாக கேமிங் நேரங்களில் போனின் பெர்ஃபாமென்ஸ் பிரிவில் எவ்விதமான பின்னடைவும் ஏற்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்டர் டிராப் அம்சத்துடன் கூடிய 6.15 அங்குல எல்சிடி திரையை பெற்று வெள்ளை , கருப்பு அல்லது நீலம் என மூன்று நிறங்களை பெற்று இந்நிறுவனத்தின் சொந்த சிப்செட் மாடலான Kirin 710 கொண்டு 4 ஜிபி ரேம் அல்லது 6 ஜிபி ரேம் என இரு வித மாறுபாட்டில் பொதுவாக 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக அமைந்துள்ளது.

கேமரா பிரிவில் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. குறிப்பாக 24 MP பிரைமரி சென்சார், 8 MP 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 2 MP டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டதாக அமைந்துள்ளது.

Huawei Nova 4e

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 32 எம்பி சென்சாரை கொண்டதாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள , ஹூவாவே நோவா 4இ போனில் 15 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் 3,340mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹூவாய் நோவா 4இ விலை ரூபாய் 20,700 என 4 ஜிபி ரேம் மாடலும், ரூபாய் 22,800 என 6 ஜிபி ரேம் பெற்ற மாடலும் சீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.