ஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு என சொந்த ஓஎஸ் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஓஎஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மாற்றாக விளங்க்கூடும் என கருதப்படுகின்றது.

அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான தடையை தொடர்ந்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்பாளராக விளங்கும் சீனாவின் ஹூவாய் நிறுவனம், ஆண்ட்ராய்டு மற்றும் மைக்ரோசாஃப்ட் ஓஎஸ் இயங்குதளங்களுக்கு போட்டியாக ஹூவாய் ஓஎஸ் இயங்குதளம் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக ஹூவாய் நிறுவன அதிகாரி ரிச்சர்டு யூ தெரிவித்துள்ளார்.

ஹூவாய் ஓஎஸ்

தொலைத்தொடர்பு துறையில் ஹூவாய் நிறுவனம், உலகின் மிகப்பெரிய அளவிலான டெக்னாலஜி சார்ந்த விடயங்களை கொண்டதாக விளங்கும் நிலையில், அமெரிக்காவில் 5ஜி தொடர்பான சேவைக்கான தொலைத்தொடர்பு முறையில் உள்ள கருவிகள் மூலம் சீன நாட்டிற்கு உளவு பார்க்க பயன்படுத்தப்படாலாம் என அமெரிக்கா கருதிய காரணத்தால் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் ஹூவாவே நிறுவனம், அமெரிக்காவின் கருத்தில் எந்த உண்மையும் இல்லை என குறிப்பிட்டது. ஆனால் அமெரிக்கா தனது நட்பு நாடுகளிலும் ஹூவாய் பொருட்களை தடை விதிக்க கோரிக்கை விடுத்தது. இதன் காரணாக ஹூவாய் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பாதிப்படையும் என கருதப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் கணினிகளுக்கான மைக்ரோசாஃப்ட் ஓஎஸ் முன்னணியில் உள்ள நிலையில், முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களுக்கு என சொந்தமான ஓஎஸ் ஒன்றை உருவாக்கி வருவதாக welt de என்ற தளத்துக்கு ஹூவாய் அதிகாரி ரிச்சர்டு யூ அளித்த பேட்டியில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பிரசத்தி பெற்ற ஆப்பிள் தயாரிப்புகளை விட ஹூவாவே நிறுவனத்தின் மொபைல் போன்கள் சிறந்து விளங்குவதனை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். தற்போது ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களான ஹானர் பிராண்டு உட்பட ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி EMUI அடிப்படையில் செயல்படுகின்றது.

ஆனால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு போட்டியாக வந்த விண்டோஸ் ஓஎஸ், மற்றும் சாம்சங் டைஜன், நோக்கியா சிம்பியான் போன்றவை பெரிதாக வரவேற்பில்லாமல் போன நிலையில், ஹூவாய் ஓஎஸ் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொறுத்திருந்துதான அறிய முடியும், ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக டெக் உலகத்தை சீனா தனது கைகளுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது.