Home Tech News Mobiles ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது | Huawei P30, P30 Pro

ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது | Huawei P30, P30 Pro

சீனாவின் ஹூவாய் நிறுவனம், புதிய P30 சீரிஸ் மாடலில் ஹூவாய் பி30, பி30 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்களை இன்றைக்கு பாரீஸ் நகரில் நடைபெற்ற விழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

குவாட் கேமரா செட்டப் என அழைக்கப்படுகின்ற உயர்தர புகைப்படங்களை பெற உதவுவதுடன், உலகின் மிகவும் அட்வான்ஸ்டு கேமரா சிஸ்டத்தை பெற்ற ஸ்மார்ட்போன் மாடலாக பி30 ப்ரோ விளங்குகின்றது.

ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

கடந்த வருடம் மாபெரும் வெற்றி பெற்ற பி20, பி20 ப்ரோ மாடலை தொடர்ந்து இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள பி30 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் நவீனத்துவமான கேமரா சென்சார் கொண்டதாக விளங்குகின்றது.

கேமரா பிரிவில் Leica நிறுவன ஆதரவுடன் பி30 புரோ போனில் வழங்கப்பட்டுள்ள குவாட் கேமரா செட்டப்பில் பிரைமரி சென்சாராக சூப்பர் செப்க்ட்ரம் 40 மெகாபிக்சல் , அல்ட்ரா ஒயைட் ஏங்கிள் 20 மெகாபிக்சல் சென்சார், டெலிபோட்டோ கேமரா 8 மெகாபிக்சல் சென்சார் (5X zoom) உடன் வழங்கப்பட்டு, கூடுதலாக எல்இடி ஃபிளாஷ் கீழ் பகுதியில் Time-of-Flight (TOF) கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து குறைந்தபட்ச மாடலாக விளங்குகின்ற ஹூவாய் P30 போனில், பிரைமரி சென்சாராக சூப்பர் செப்க்ட்ரம் 40 மெகாபிக்சல் , அல்ட்ரா ஒயைட் ஏங்கிள் 16 மெகாபிக்சல் சென்சார், டெலிபோட்டோ கேமரா 8 மெகாபிக்சல் சென்சார் (3X zoom) உடன் வழங்கப்பட்டுள்ளது.

இரு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் பொதுவாக செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு என பிரத்தியேகமான 32 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றுள்ளது.

ஹூவாய் P30 Pro ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல OLED திரையுடன் முழு ஹெச்டி பிளஸ் காட்சி அமைப்பினை பெற்று, 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக விளங்கும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த போனை இயக்க ஹைசிலிக்கான் சிப்செட் Kirin 980 SoC  கொண்டுள்ளது. இந்த போன் மாடலில்  8ஜிபி ரேம் பொதுவாக பெற்று 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி  சேமிப்பு வசதி கொண்டிருக்கின்றது.

40W  சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 4,200mAh பேட்டரி கொண்டு ஹூவாய் பி 30 புரோ போன் இயக்கப்படுகின்றது.

ஹூவாய் P30 ஸ்மார்ட்போனில் 6.1 அங்குல OLED திரையுடன் முழு ஹெச்டி பிளஸ் காட்சி அமைப்பினை பெற்று, 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக விளங்கும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த போனை இயக்க ஹைசிலிக்கான் சிப்செட் Kirin 980 SoC  கொண்டுள்ளது. இந்த போன் மாடலில் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டிருக்கின்றது. 22.5 W  சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 3,650mAh பேட்டரி கொண்டு ஹூவாய் பி 30  போன் இயக்கப்படுகின்றது.

பொதுவாக இரு மாடல்களிலும் 4 ஜி வோல்ட்இ , டூயல் சிம், ஆண்ட்ராய்டு பை அடிப்படையிலான இயங்குதளம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

ஹூவாய் P30, P30 ப்ரோ விலை பட்டியல்

ஹூவாய் P30 மொபைல் மாடலின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 62,200 (EUR 799) ஆகும்.

ஹூவாய் P30 ப்ரோ மொபைல் மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 77,950 (EUR 999) ஆகும்.

ஹூவாய் P30 ப்ரோ மொபைல் மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 85,550 (EUR 1,099) என விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

ஹூவாய் P30 ப்ரோ மொபைல் மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 97,350 (EUR 1299) ஆகும்.

இந்தியாவில் அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு அமேசான் இந்தியா தளத்தில் விற்பனைக்கு வள்ளியாக உள்ளது. விலை மதிப்பு இந்திய ரூபாயில் தோராயமானதாகும்.

HUAWEI P30 specifications

  • 6.1 அங்குல (2340 x 1080  pixels) FHD+ OLED HDR Display with DCI-P3 color gamut
  • Kirin 980 (2 x Cortex A76 2.6 GHz + 2 x Cortex A76 1.92 GHz + 4 x Cortex A55 1.8 GHz) processor with 720 MHz ARM Mali-G76MP10 GPU
  • 6GB / 8GB LPDDR4x ரேம், 128GB சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் EMUI 9.0
  • 40MP ரியர் கேமரா f/1.8 துவாரம், 16MP அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் f/2.2 துவாரம், 8MP 3x டெலிபோட்டோ லென்ஸ் f/2.4 துவாரம், OIS, AIS (HUAWEI AI).
  • 32MP செல்பீ கேமரா f/2.0 துவாரம்
  • இரு சிம் கார்டு
  • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • நீர் மற்றும் தூசு பாதுகாப்பு (IP53)
  • டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz and 5GHz) (wave2), ப்ளூடூத் 5 LE, GPS (L1 + L5 dual band), NFC, USB Type-C (GEN1)
  • 3650mAh ஃபாஸ்ட் சார்ஜிங்

HUAWEI P30 Pro specifications

  • 6.47 அங்குல (2340 x 1080 pixels) FHD+ OLED HDR Display with DCI-P3 Color Gamut
  •  Kirin 980 (2 x Cortex A76 2.6 GHz + 2 x Cortex A76 1.92 GHz + 4 x Cortex A55 1.8 GHz) processor with  720 MHz ARM Mali-G76MP10 GPU
  • 8GB LPDDR4x ரேம் உடன் 128GB / 256GB / 512GB  சேமிப்பு வசதி
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் EMUI 9.0
  • 40MP ரியர் கேமரா f/1.6 துவாரம், OIS, 20MP அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் f/2.2 துவாரம், 8MP 5x டெலிபோட்டோ லென்ஸ் OIS, ToF டெப்த் சென்சார், Laser AF, PDAF, CAF, AIS
  • 32MP செல்பி கேமரா f/2.0 துவாரம்
  • இரு சிம் கார்டு
  • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • நீர் மற்றும் தூசு பாதுகாப்பு (IP53)
  • டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz and 5GHz) (wave2), ப்ளூடூத் 5 LE, GPS (L1 + L5 dual band), NFC, USB Type-C (GEN1)
  • 4200mAh ஃபாஸ்ட் சார்ஜிங்

https://www.youtube.com/watch?v=oqsHkiIpo9o?autoplay=1

Exit mobile version