வருகின்ற மார்ச் 26-ம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹூவாய் P30 மற்றும் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பற்றி நுட்பவிபரங்கள் மற்றும் படங்கள் அறிமுகத்துக்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாரீஸ் நகரின் அறிமுகத்தை தொடர்ந்து இந்திய சந்தையிலும் ஹூவாய் பி30 சீரிஸ் போன் விற்பனைக்கு வருவதாக IANS மூலம் உறுதியாகியுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களின் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.
ஹூவாய் பி30 மற்றும் ஹூவாய் பி30 ப்ரோ விபரங்கள்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் ஹூவாய் நிறுவனம், தனது அடுத்த பிளாக்ஷீப் கில்லர் மாடலாக வெளியிட உள்ள பி30 வரிசையில் பல்வேறு அம்சங்கள் மற்றும் நவீனத்துவத்தை பெற்ளிருக்கும் என உறுதிப்படுதப்பட்டுள்ளது.
ஹூவாயின் பி30 போனில் 6.1 அங்குல OLED திரையுடன் முழு ஹெச்டி பிளஸ் காட்சி அமைப்பினை பெற்று, 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக விளங்கும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த போனை இயக்க இநிறுவனத்தின் சொந்த சிப்செட் மாடலான Kirin 980 SoC கொண்டுள்ளது. இந்த போன் மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டிருக்கும்.
கேமரா பிரிவில் பிரைமரி ஆப்ஷனாக மூன்று கேமரா வழங்கப்பட்டு 40 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், மற்றும் 16 எம்பி வைட் ஏங்கிள் லென்ஸ் ஆகியவற்றுடன், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 32 எம்பி சென்சார் கொண்டதாக இருக்கும். இந்த போனை இயக்க 3,650mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
பி30 புரோ நுட்பவிபரங்கள்
ஹூவாயின் பிரீமியம் ரக பி30 புரோ போனில் 6.4 அங்குல OLED திரையுடன் முழு ஹெச்டி பிளஸ் காட்சி அமைப்பினை பெற்று, 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக விளங்கும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த போனை இயக்க ஹைசிலிக்கான் சிப்செட் Kirin 980 SoC கொண்டுள்ளது. இந்த போன் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி, 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டிருக்கும்.
கேமரா பிரிவில் பிரைமரி ஆப்ஷனாக ஹூவாவே பி30 ப்ரோ மாடலில் குவாட் கேமரா வழங்கப்பட்டு 40 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், மற்றும் 16 எம்பி வைட் ஏங்கிள் லென்ஸ் ஆகியவற்றுடன் கூடுதலாக எல்இடி ஃபிளாஷ்க்கு கீழாக ToF சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 32 எம்பி சென்சார் கொண்டதாக இருக்கும். இந்த போனை இயக்க 4,200mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.