ஹூவாய் பி30 லைட்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய பி30 வரிசையில் , ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.19,990 என தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு அமேசான் இந்தியா வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த மாதம் இறுதியில் பாரீஸ் நகரில் முதன்முறையாக ஹூவாய் பி30 வரிசை அறிமுகம் செய்யப்பட்டு ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் பி30 சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது.

ஹூவாய் பி30 லைட் சிறப்புகள்

பி30 வரிசை மாடல்களில் குறைந்த விலை கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்ற ஹூவாய் பி30 லைட் போனில் டிரிப்ள் கேமரா செட்டப் வழங்கப்பட்டு அற்புதமான புகைப்பட்டத்தை பெற சூப்பர் ஜூம் வசதிகளை கொண்டுள்ளது.

பி30 லையிட் போனின் கேமரா பிரிவில் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. 24 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா சென்சார் ஆகியவற்றை கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32 மெகாபிக்சல் கேமரா சென்சாரை கொண்டதாக வந்துள்ளது.

huawei-p30-lite

6.15 அங்குல எல்சிடி திரையை பெற்று வெள்ளை , கருப்பு அல்லது நீலம் என மூன்று நிறங்களை பெற்று இந்நிறுவனத்தின் சொந்த சிப்செட் மாடலான Kirin 710 கொண்டு 4 ஜிபி ரேம்,  6 ஜிபி ரேம் என மாறுபாட்டில் பொதுவாக 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக அமைந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள , ஹூவாவே பி30 லைட் போனில் 15 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் 3,340mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.

Huawei P30 lite: ஹூவாய் பி30 லைட் சிறப்புகள் மற்றும் விலை விபரம்

ஹூவாய் பி30 லைட் விலை

அமேசான் இந்தியா வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற ஹூவாய் பி30 லைட் 4ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு வசதி மொபைல் விலை ரூ. 19,990 மற்றும் ஹூவாய் பி30 லைட் 4ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு வசதி மொபைல் விலை ரூ. 22,990

மேலும் படிங்க – ஹூவாய் பி30 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்

HUAWEI P30 Lite specifications

 • 6.15 அங்குல (2312  x 1080 pixels) முழு HD+ 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு
 • ஆக்டோ கோர் Kirin 710 12nm (4 x 2.2GHz  Cortex-A73 +4 x 1.7GHz Cortex-A53) with ARM Mali-G51 MP4 GPU
 • 6GB ரேம், 128GB சேமிப்பு வசதி மற்றும் 512GB மைக்ரோ எஸ்டி கார்டு
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன EMUI 9.0
 • ஹைபிரிட் சிம் கார்டு
 • 24MP ரியர் கேமரா f/1.8 துவாரம்,  2MP சென்சார், மற்றும் 8MP 120° அல்ட்ரா வைட் கேமரா
 • 32MP கேமரா கொண்டு f/2.0 துவாரம்
 • கைரேகை சென்சார்
 • அளவுகள்: 152.9×72.7×7.4mm எடை: 159g
 • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடுத் 4.2 LE, GPS + GLONASS, USB Type-C
 • 3340mAh பேட்டரி

மேலும் – புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் செய்திகள் மற்றும் மொபைல் செய்திகள் படிக்கலாம்