huawei-p30-lite

மூன்று கேமரா செட்டப் பெற்ற ஹூவாய் பி30 லைட் (Huawei P30 lite) ஸ்மார்ட்போன் மாடல் பிலீப்பைன்ஸ் நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 32 எம்பி செல்பி கேமரா உடன் கொண்டதாக வந்துள்ளது.

நேற்றைக்கு ஹூவாய் பி30 , ஹூவாய் பி30 ப்ரோ  மாடல்கள் பாரீஸ் நகரில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இந்தியாவில் அமசான் வலைதளத்தில் பி30 சீரிஸ் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பினை ஹூவாய் வெளியிட்டுள்ளது.

ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

சில நாடுகளில் ஹூவாய் பி30 லைட் மாடல் ஆனது ஹூவாய் நோவா 4இ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது. பிலீப்பைன்ஸ் நாட்டில் பி 30 லைட் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்டர் டிராப் அம்சத்துடன் கூடிய 6.15 அங்குல எல்சிடி திரையை பெற்று வெள்ளை , கருப்பு அல்லது நீலம் என மூன்று நிறங்களை பெற்று இந்நிறுவனத்தின் சொந்த சிப்செட் மாடலான Kirin 710 கொண்டு 6 ஜிபி ரேம் என மாறுபாட்டில் பொதுவாக 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக அமைந்துள்ளது.

ஹூவாய் பி30 லைட்

கேமரா பிரிவில் பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது. குறிப்பாக 24 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்சல் 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டதாக அமைந்துள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 32 மெகாபிக்சல் சென்சாரை கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள , ஹூவாவே பி30 லைஃ போனில் 15 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் 3,340mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ப்லீப்பைன்ஸ் மற்றும் கனடா நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்ற புதிய ஹூவாய் பி30 லைட் போன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 22,500 ஆகும்.

HUAWEI P30 Lite specifications

  • 6.15 அங்குல (2312  x 1080 pixels) முழு HD+ 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு
  • ஆக்டோ கோர் Kirin 710 12nm (4 x 2.2GHz  Cortex-A73 +4 x 1.7GHz Cortex-A53) with ARM Mali-G51 MP4 GPU
  • 6GB ரேம், 128GB சேமிப்பு வசதி மற்றும் 512GB மைக்ரோ எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன EMUI 9.0
  • ஹைபிரிட் சிம் கார்டு
  • 24MP ரியர் கேமரா f/1.8 துவாரம்,  2MP சென்சார், மற்றும் 8MP 120° அல்ட்ரா வைட் கேமரா
  • 32MP கேமரா கொண்டு f/2.0 துவாரம்
  • கைரேகை சென்சார்
  • அளவுகள்: 152.9×72.7×7.4mm எடை: 159g
  • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடுத் 4.2 LE, GPS + GLONASS, USB Type-C
  • 3340mAh பேட்டரி

மேலும் – புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் செய்திகள் மற்றும் மொபைல் செய்திகள் படிக்கலாம்