huawei-p30-p30-pro-prices

வரும் மார்ச் 26-ல் வாவே நிறுவனத்தின் புதிய ஹூவாய் பி30, ஹூவாய் பி30 புரோ மற்றும் ஹூவாய் பி30 லைட்  ஆகிய மொபைல் போன்களின் விலை விற்பனைக்கு முன்பாக வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பாளர்களில் இரண்டாவது இடத்தில் விளங்கும் சீனாவின் ஹூவாவே நிறுவனம், புதிய பி30 சீரிஸ் மாடலை பாரீஸ் நகரில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், அதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

ஹூவாய் பி30 சீரிஸ் விலை பட்டியல்

ஐரோப்பியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ள விலையை வின்ஃபியூச்சர் என்ற தளம் வெளியிட்டுள்ளது. இங்கே தொகுக்கப்பட்டுள்ள விலை ஐரோப்பா சந்தையின் அடிப்படையில் இந்திய மதிப்பில் ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஹூவாய் பி30 லைட் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 28,000 ஆகும்.

ஹூவாய் பி30 மொபைல் மாடலின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 58,000 ஆகும்.

ஹூவாய் பி30 புரோ மொபைல் மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 72,000 ஆகும்.

ஹூவாய் பி30 புரோ மொபைல் மாடலின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் விலை ரூபாய் 80,000 என விற்பனைக்கு வெளியிடப்படலாம் என கருதப்படுகின்றது.

மேலும் படிங்க – ஹூவாவே நிறுவனத்தின் பி30 சீரிஸ் நுட்ப விபரம்