huawei p30 pro

சீனாவின் தலைமையிடாக கொண்டு செயல்படும் ஹூவாவே நிறுவனத்தின் ஹூவாவே P30 சீரிஸ் (Huawei P30 Series) வரிசையின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக ஹூவாவே P30, ஹூவாவே P30 ப்ரோ மற்றும் ஹூவாவே P30 லைட் என மூன்று மொபைல் போன் மாடல்கள் மார்ச் 26ந் தேதி பாரீஸ் நகரில் விற்பனைக்கு வரவுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஹூவாவே விளங்குகின்றது.

ஹூவாவே பி30 ப்ரோ மாடலில் குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கும். மேலும் இந்த போனில் 10x ஆப்டிக்கல் ஜூம் வசதியை பெற்றதாக விளங்கும் என கூறப்படுகின்றது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் சிஇஓ நிலவு படத்தை வெளியிட்டு க்வாட் கேமரா முறையில் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

ஹூவாவே P30 சீரிஸ் டீசர் வெளியீடு

சமீபத்தில் சில டிவிட்டர் லீக்ஸ்டார் பிரபலங்கள் வெளியிட்ட தகவல்கள் மற்றும் படங்கள் வாயிலாக பல்வேறு முக்கிய விபரங்கள் இதன் மூலம் கசிந்துள்ளது. குறிப்பாக பிரைமரி கேமரா சென்சார் ஆப்ஷனில் ஹூவாவே பி30 போனில் மொத்தமாக நான்கு கேமரா செட்டப் பெற்றிருக்கும்.

huawei-p30-pro

இதில் f/1.6 வைட் ஏங்கிள் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் , மற்றும் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் ஆகியவற்றுடன் கூடுதலாக எல்இடி ஃபிளாஷ்க்கு கீழாக ToF சென்சாரும் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் இடம்பெற்றிருக்கின்ற செல்ஃபீ கேமரா பற்றி விபரம் வெளியாகவில்லை.

முழு ஹெச்டி பிளஸ்  OLED திரையுடன் 1,080 x 2,340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாக விளங்கும் இந்த போனின் டிஸ்பிளே குறித்தான விபரங்கள் வெளியாகவில்லை. ஹூவாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹைசிலிகான் நிறுவனத்தின் Kirin 980 SoC  கொண்டுள்ளது. இந்த போன் மாடலின் ஹூவாவே பி30 போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் ஹூவாவே பி30 ப்ரோவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி ற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதியாக கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றொரு பேஸ் மடலாக ஹூவாவே பி30 லைட் விலை குறைந்த பி30 சீரிஸ் மாடலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹூவாவே P30 சீரிஸ் போன் விற்பனைக்கு வரவுள்ளது.