Apple inc. logo

ஆப்பிள் ஐபோன் 5ஜி மாடல்களுக்கு ஹூவாய் நிறுவனம் Balong 5G மோடத்தை விற்பனை செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் மற்றும் ஹூவாய், சியோமி போன்ற நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளன. ZTE, ஒப்போ மற்றும் விவோ, ஆசூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி மொபைல் மாடலைகள் தயாரிப்பில் தீவரமாக செயல்பட்டு வருகின்றன.

5ஜி மொபைல் தயாரிப்பில் பிரசத்தி பெற்ற ஆப்பிள் நிறுவனம், தொடர்ந்து பின் தங்கியுள்ளது. போட்டியாளரான சாம்சங் உலகின் முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. ஹூவாய் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் அரங்கில் இந்நிறுவனத்தின் சொந்த சிப்செட் மாடலான Balong 5G மோடம் பெற்ற மடிக்ககூடிய ஹூவாய் மேட் எக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5ஜி வருகை எப்போது ?

குவால்காம் நிறுவனம் 5ஜி சிப்செட்களை தயாரித்து பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு வழங்க தொடங்கி விட்டது. ஆனால் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கிடைய உள்ள காப்புரிமை மீதான பல்வேறு வழக்குகளால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 5ஜி சிப்புகளை குவால்காம் வழங்காது.

மேலும் சாம்சங் மற்றும் மீடியாடெக் போன்ற நிறுவனங்களின் 5ஜி சிப் மோடத்தை ஆப்பிள் பயன்படுத்த பெரிதும் ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. ஆப்பிள் ஐபோன்களுக்கு பிராசெஸர் வழங்கி வரும் இன்டெல் நிறுவனம், தனது 5ஜி மோடம் தயாரிப்பில் பின்தங்கி உள்ளதால் ஆப்பிள் நிறுவனம் கவலை அடைந்துள்ளது.

ஆனால் ஹூவாய் நிறுவனம் அதிகாரி ஒருவர் முன்பு ஒரு முறை அளித்த பேட்டியில், தங்கள் நிறுவன சிப்செட்கள் எந்த போட்டியாளர் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படாது என குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த கொள்கையில் ஆப்பிள் நிறுவனத்துக்காக பின் வாங்கி உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஹூவாய் நிறுவனத்தின் Balong 5G மோடம் உயர் திறன் வாய்ந்த சிப்செட் ஆகும். இந்த சிப்புகளை ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு மட்டும் சப்ளை செய்ய ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அமெரிக்காவினை ஆளும் டிரம்ப் அரசு சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு எதிரான கொள்கையை கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5ஜி மாடலுக்கு சிப்செட் வழங்க ஹூவாய் ஆர்வம்

ஹூவாய் தனது தயாரிப்புகள் மூலம் அமெரிக்காவின் முக்கிய விபரங்களை வேவு பார்க்க பயன்படுத்தலாம் என குறிப்பிடுகின்றது. அவ்வாறு எந்தவொரு நுட்பமும் பயன்படுத்தவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு வேளை ஆப்பிள் நிறுவனம், தனது 5ஜி ஐபோன் மாடல்களுக்கு ஹூவாய் சிப்களை பயன்படுத்தினாலும், அமெரிக்காவில் விற்பனை செய்ய ஐபோன் 5ஜி அனுமதிக்க வாய்ப்பில்லை எனவே ஆப்பிள் நிறுவனம் ஹூவாய் நிறுவனத்தின் மீது ஆர்வம் செலுத்த வாய்ப்புகள் குறைவே என தெரிகின்றது.

உலகின் மிகப்பெரிய டெக் சாம்ராஜியமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், புதிய அம்சங்களை வழங்குவதில் ஹூவாய் மற்றும் சாம்சங் நிறுவனத்திடம் பின்தங்க தொடங்கியுள்ளது.