புதிய டேப்லெட், பிசி-கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு

சமீபத்தில் மேட் 20 புரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம், புதிய டேப்லேட்கள் மற்றும் பிசி-களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து ஹவாய் இந்தியா நிறுவனம் வெளியிட்டள்ள அறிக்கையில், ஹவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதுடன், தற்போது புதிய டேப்லெட், பிசி-கள் போன்றவற்றை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய டேப்லெட், பிசி-கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்: ஹவாய் நிறுவனம் அறிவிப்பு

இதுகுறித்து ஹவாய் நிறுவன உயர் அதிகாரி எஸ்யு தெரிவிக்கையில், இந்தியா தற்போது டயர்-1 நாடாக இருந்து வருகிறது. இதனால் இந்தியாவில் அதிக முதலீடு செய்து, புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பெர்சனல் கம்ப்யூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளோம்.  ஹவாய் நிறுவனத்தின் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்து செல்ல எளிதாகவும் இருக்கும் என்றார்.