வயர்லெஸ் சார்ஜர் உடன் மேட் 20 புரோவை அறிமுகம் செய்கிறது ஹவாய் நிறுவனம்

சீனாவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம், தனது புதிய தயாரிப்பான மேட் 20 புரோ ஸ்மார்ட் போனை, வயர்லெஸ் சார்ஜ்ருடன் இந்தியாவில் அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த வயர்லெஸ் சார்ஜர்கள், யுனிவர்சல் கம்படேபிளிட்டியுடன் Qi தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தனாகவே சார்ஜ் செய்யும் டிவைஸ் ஸ்மார்ட்போனா? அலது இயர்போனா? என்பதை கண்டுபிடித்து, அதற்கு ஏற்றார்போல் சார்ஜிங் ஆற்றலை மாற்றி பாதுகாப்பாக சார்ஜ் செய்யும்.

இந்த சார்ஜர் மூலம் வெறும் 10 நிமிட சார்ஜிங் செய்தால் 15W சார்ஜ் பெற்று, பேட்டரி 12 சதவிகித ஆற்றல் பெற்றும். இதுவே 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 31 சதவிகித ஆற்றல் பெற முடியும் என்று ஹவாய் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹவாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட் 20 புரோ ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போன் அறிமுகத்தின் போதே வயர்லெஸ் சார்ஜ்ர்களுடன் வெளியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜர் உடன் மேட் 20 புரோவை அறிமுகம் செய்கிறது ஹவாய் நிறுவனம்

மேட் 20 புரோ ஸ்மார்ட்போன்கள், ஹவாய் நிறுவனத்தின் முதல் 5G ரெடி 7nm சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனாகும் இந்த சிப்செட் கிரின் 980, இத்துடன் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் திறனுடன் இந்தியாவில் வெளியாக உள்ளது.

மற்றொரு குறிப்பிடத்தக்க வசதி என்னவென்றால், வயர்லெஸ் சார்ஜ்ஜர் என்பதாகும். இதில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த வயர்லெஸ் சார்ஜ்ஜர் தானவே கீ, காயின் போன்ற மெட்டல் பொருட்களை அடையாளம் கண்டு, பவர் ஆப் ஆகி விடும்.

வயர்லெஸ் சார்ஜர் உடன் மேட் 20 புரோவை அறிமுகம் செய்கிறது ஹவாய் நிறுவனம்

ஹவாய் வயர்லெஸ் சார்ஜ்ஜர்கள், சிப் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால், இது தானாகவே பவரை கட்டுபடுத்தி கொள்ளும், மேலும் தேவையான பேட்டரி சதவிகிதத்திற்கு ஏற்ற வகையில் செயல்படும்.