2019ல் கிரின் 990 சிப்செட்கள் வெளியிடப்படும் ஹவாய் நிறுவனம்  அறிவிப்பு

சீன தயாரிப்பு நிறுவனமான ஹவாய் நிறுவனம் அடுத்ததாக கிரின் 990 சிப்செட்கள் தைவான் செமிகண்டெக்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த சிப்செட்கள் வரும் 2019ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாசர்கள் இரண்டாம் தலைமுறை 7nm பிரசாசர்களாக இருப்பதுடன், முதல் 5G-ரெடி சிப்செட் கொண்டதாக இருக்கும் என்று ஹவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019ல் கிரின் 990 சிப்செட்கள் வெளியிடப்படும் ஹவாய் நிறுவனம்  அறிவிப்பு

இந்த பிராசசர்கள் பலாங் 5000 5G மோடம் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறித்து ஆண்டிராய்டு ஹெட்லைன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 2019ல் கிரின் 990 சிப்செட்கள் தயாரிப்பில், அதிநவீன பேப்ரிகேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 20 சதவிகிதம் டிரான்சிஸ்டர் அடர்த்தியுடன், 10 சதவிகிதம் குறைந்த மின் பயன்பாடு மற்றும் 10 சதவிகித அதிவேக செயல் திறன் கொனடதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெர்லின் நடந்த IFA விழாவில் கிரண் 980 சிப்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சிப்செட்கள் இந்தாண்டின் நான்காம் காலாண்டில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாக உள்ளது.

2019ல் கிரின் 990 சிப்செட்கள் வெளியிடப்படும் ஹவாய் நிறுவனம்  அறிவிப்பு

ஹவாய் நிறுவனத்தின் நுகர்வோர் பிசினஸ் குரூப் சிஇஓ ரிச்சர்ட் யூ, கிரண் 980 சிப்செட்கள் மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும் என்று உறுதி செய்துள்ளார்.

கிரண் 980 என்பது உலகின் முதல் முறையான SoC முதல் ஸ்போர்ட்ஸ் மோடம் ஆகும். இது LTE-யின் 21 வகைகளுக்கு சப்போர்ட் செய்வதுடன், 1.4Gbps டவுன்லிங்க்களுக்கு சப்போர்ட் செய்யும் என்று ஹவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.