இந்தியாவின் ஐபால் நிறுவனத்தின் புதிய ஐபால் ஸ்லைட் எலான் 4G2 டேப்ளெட் ரூபாய் 13,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டேப்ளெட் வாய்ஸ் காலிங் வசதியை வழங்குகின்றது.

ஐபால் ஸ்லைட் எலான் 4G2 டேப்ளெட்

4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்ற ஸ்லைட் எலான் 4G2 டேப்ளெட்டில் வாய்ஸ் அழைப்புகளை புளூடூத் ஹெட்செட் வாயிலாக மட்டுமே மேற்கொள்ளலாம். இந்த டேப்ளெட் 10.1 இஞ்ச் திரை அகலத்துடன் 1280×800 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக 1.3GHz குவாட்கோர் பிராசஸருடன் கூடிய 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை வாயிலாக 32ஜிபி வரை அதிகரிக்கலாம்.

21 இந்திய மொழிகளின் ஆதரவினை பெற்ற இந்த டேப்ளெட்டின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா எல்இடி ஃபிளாசுடன் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபீ படங்களுக்கு 2 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற எலான் 4G2 கருவியில் கூடுதல் விருப்பங்களாக 4G, VoLTE, 3G, வை-பை, பூளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி போன்றவற்றுடன் 7000mAh திறன் பெற்ற பேட்டரியால் இயக்கப்படுகின்றது.