செல்போன்கள் மீதுள்ள மோகம் தற்பொழுது அதிகரித்துக்கொண்டே வருகிறது. மொபைல் போன் வரவுகள் அதிகரிப்புக்கு ஏற்ப புதிய புதிய மொபைல் போன்களை பலர் மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.

ஆனால், இன்றைய காலத்து மக்கள் அதிகமான விலை கொடுத்து செல்போன் வாங்குவதை விட குறைந்த விலையிலேயே அனைத்து வசதிகளும் உடைய செல்போன்களை வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப தற்பொழுது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது கர்நாடகாவை சேர்ந்த நிறுவனம்.

வீட்டு உபயோக பொருட்களை வாடகைக்கு விடும் ரெண்டோமோஜோ ( Rentomojo) என்ற நிறுவனம், ஒரு புதிய முயற்சியாக செல்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு மாத வாடகைக்கு கொடுக்கிறது. தற்பொழுது, i phone X செல்போனை 4,299 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுப்பதாக அறிவித்திருக்கிறது.

ஆனால், அதற்கு முன் பணமாக 9,998 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்த முன் பணம் திருப்பித்தரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், Google Pixel 2 செல்போனை, 2,099 ரூபாய் வாடகைக்கு கொடுக்கிறது. தற்பொழுது, ஐ-போன் மட்டுமே மிக அதிக வாடகைக்கு கொடுக்கப்படுகிறது என்றும் இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதே போன்று, Samsung Galaxy S9, Samsung Note 8, Apple iPhone 8 போன்ற செல்போன்களும், Google Home smart speaker போன்ற Speaker வகைகளும் வாடகைக்கு கொடுக்கப்படுகிறது.

1 COMMENT

  1. வாடகைக்கு வருகிறது செல்போன்கள் – Tamil News

    […] Source link […]

Comments are closed.