ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக சரிவை சந்தித்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களை பெற முயற்சி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்த விற்பனை சரிவு காரணமாக வருத்தமடைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய உயர்அதிகாரி டிம் குக், இந்தியாவின் இந்தாண்டின் நான்காம் காலாண்டுக்கான விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் பொதுவாகவே எலக்ட்ரானிக் பொருட்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கை அடிப்படையாக கொண்ட ஆய்வு நிறுவன உயர்அதிகாரி நீல் ஷா தெரிவிக்கையில், காலாண்டில் நடந்தப்பட்ட ஆய்வின்படி 7,00,000 முதல் 8,00,000 யூனிட்கள் வரை விற்பனையானது.

2018ம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் 2 மில்லியன் போன்களை விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது, அதிக விலை காரணமாகவே இந்த விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி ஆண்டிராய்டு போன்களின் பெரியளவிலான வளர்ச்சியும் இந்தியாவில் இந்தியாவில் ஐபோன் விற்பனை சரிய காரணமாக அமைந்து விட்டது.