இந்தியாவை ஆளும் சீனர்கள், எந்த பிரிவில் தெரியுமா..!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிக வேகமாக அதிகரிக்கும் நிலையில், 2018 ஆம் ஆண்டில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மொத்த மொபைல் போன் சந்தையில் 50 சதவீத பங்களிப்பை ஃபாக்ஸ்கான், சாம்சங் மற்றும் ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் பெற்றுள்ளது.

இந்தியாவின் மொத்த விற்பனையில் 75 சதவீத பங்களிப்பை சியோமி, சாம்சங், ஒப்போ, விவோ மற்றும் டிரான்ஸன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் லாவா தவிர மற்ற நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவே தொடர்ந்து சந்தித்து வருகின்றது.

இந்தியாவை ஆளும் சீனர்கள், எந்த பிரிவில் தெரியுமா..!

2018 ஆம் ஆண்டின் முடிவில் டாப் 4 நிறுவனங்கள் பட்டியலில்;-

1 . சியோமி நிறுவனம் 41.1 மில்லியன் மொபைல்களை டெலிவரி செய்து 28.9 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனம் சுமார் 23,000 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

2. சாம்சங் மொபைல் நிறுவனம் 31.9 மில்லியன் போன்களை டெலிவரி செய்து 22.4 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது. அதிகபட்சமாக சாம்சங் நிறுவனம் ரூ. 31,000 கோடிக்கு விற்றுள்ளது.

3. விவோ மொபைல் போன் நிறுவனம் 14.2 மில்லியன் போன்களை விற்பனை செய்து 10.2 சதவீதம் சந்தையை கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் 11,000 கோடி மதிப்பிலான போன்களை விற்பனை செய்துள்ளது.

4. ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் 10.2 மில்லின் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்து 4வது இடத்தைப் பெற்று 7.2 சதவீத இந்திய சந்தையை பெற்றுள்ளது. ரூ.12,000 கோடிக்கு போன்களை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் மொத்த மொபைல் போன் சந்தையில் 0.3 சதவீத பங்களிப்பை பானாசோனிக், வீடியோகான் உட்பட 88 நிறுவனங்கள் பெற்றுள்ளதாக அதிர்ச்சி அளித்துள்ளது சைபர்மீடியா ரிசெர்ச் நிறுவன ஆய்வறிக்கை, இந்நிறுவனங்களின் ஒரு பிராண்டின் சராசரி விற்பனை ரூ. 475 கோடியாக உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் 200க்கு அதிகமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் டிசிஎல், லீஇகோ, ஏசர், ஒபிஐ, டேட்டாவின்ட் உட்பட 41 பிராண்டுகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ளன.

மேலும் படிங்க ; உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்