இன்ஃபினிக்‌ஸ் ஹாட் 7 ப்ரோ

இந்தியாவில் குறைந்த விலையில் 6ஜிபி ரேம் பெற்ற இன்ஃபினிக்‌ஸ் ஹாட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,999 விலையில் வெளியிடப்பட்டு, ஜூன் 17- 21 வரை மட்டும் ஃபிளிப்கார்டில் ரூ.1,000 தள்ளுபடியில் ரூ.8,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

சியோமி நிறுவனத்தை விட குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவனம் முன்னணி வகிக்கின்றது. இன்றைக்கு வெளியிட்டுள்ள ஹாட் 7 மொபைல் 4000mAh, 6ஜிபி ரேம், டூயல் கேமரா பெற்ற மாடலாகும்.

இன்ஃபினிக்‌ஸ் ஹாட் 7 ப்ரோ

வருகின்ற ஜூன் 17 முதல் விற்பனைக்கு பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்க உள்ள இன்ஃபினிக்‌ஸ் ஹாட் 7 ப்ரோவின் அறிமுக சலுகையாக ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு விற்பனை ஜூன் 21 வரை ரூ.8,999 விலையில் மட்டும் கிடைக்கும்.

6.19 அங்குல காட்சி திரைப்பெற்ற இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட் பயன்படுத்தப்பட்டு 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி திறனை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்டு 256 ஜிபி வரை பயன்படுத்தலாம்.

இன்ஃபினிக்‌ஸ் ஹாட் 7 ப்ரோ

ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றிய XOS 5.0 வெர்ஷனில் செயல்படுகின்ற இந்த போனில் பிரைமரி ஆப்ஷனில் AI ஆதரவை பெற்ற 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா கொண்டு எல்இடி ஃபிளாஷ் ஆதரவை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக , முன்புறத்திலும் டூயல் கேமரா ஆப்ஷன் பெற்று 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா கொண்டு எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது.

கைரேகை சென்சார்  4G VoLTE, ப்ளூடூத், வை-ஃபை, 3.5mm ஆடியோ ஜாக் உட்பட 4000mAh பேட்டரி கொண்டுள்ளது.