ரூ.8,499க்கு குவாட் கேமராவுடன் இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9, ஹாட் 9 புரோ விற்பனைக்கு வெளியானது

இன்ஃபினிக்‌ஷ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் புதிய குவாட் கேமரா சிஸ்டம் பெற்ற இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9 மற்றும் இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9 புரோ என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு ரூபாய் 8,499 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரு மாடல்களும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஹாட் 9 புரோவில் 48 எம்பி பிரைமரி மேமரா போன்றவை இந்த ஸ்மார்ட்போனை முன்னிலைப் படுத்த முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9 மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

6.6 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்ற ஹாட் 9 மாடலை மீடியாடெக் ஹீலியோ பி 22 ஆக்டோ கோர் சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக அமைந்துள்ளது.

13 எம்பி பிரைமரி கேமரா உடன் கூடுதலாக 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் பெற்று கூடுதலாக குறைந்த வெளிச்சம் உள்ள நேரங்களில் தெளிவாக படங்கள் மற்றும் வீடியோவை பெற லோ லைட் சென்சாரும் வழங்கப்பட்டு குவாட் கேமரா செட்டப்பினை பெற்றுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு இயங்குதளம் 10 மூலம் இயக்கப்படுகின்றது.

இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9 புரோ மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

பிரீமியம் மாடலான ஹாட் 9 புரோ மொபைலில் 48 எம்பி பிரைமரி கேமரா உடன் கூடுதலாக 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் பெற்று கூடுதலாக குறைந்த வெளிச்சம் உள்ள நேரங்களில் தெளிவாக படங்கள் மற்றும் வீடியோவை பெற லோ லைட் சென்சாரும் வழங்கப்பட்டு குவாட் கேமரா செட்டப்பினை பெற்றுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 மெகாபிக்சல் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு இயங்குதளம் 10 மூலம் இயக்கப்படுகின்றது.

இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9 புரோ மாடலும் 6.6 அங்குல எல்சிடி டிஸ்பிளே கொண்டு 720×1600 பிக்சல் தீர்மானத்தை பெற்று மீடியாடெக் ஹீலியோ பி 22 ஆக்டோ கோர் சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக அமைந்துள்ளது.

ரூ.8,499க்கு குவாட் கேமராவுடன் இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9, ஹாட் 9 புரோ விற்பனைக்கு வெளியானது

இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9 புரோ 4ஜிபி + 64 ஜிபி – ரூ.9,499

இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9 4ஜிபி + 64 ஜிபி – ரூ.8,499

வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி பகல் 12.00 மணிக்கு ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரூ.8,499க்கு குவாட் கேமராவுடன் இன்ஃபினிக்‌ஷ் ஹாட் 9, ஹாட் 9 புரோ விற்பனைக்கு வெளியானது