ரூ.9,999க்கு பாப் அப் கேமரா இன்ஃபினிக்ஸ் எஸ்5 புரோ விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் மிகக் குறைந்த விலையில் பாப் அப் முறையிலான கேமராவினை பெற்ற இன்ஃபினிக்ஸ் எஸ்5 புரோ மாடலை ரூ.9,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக மட்டும் ஒற்றை வேரியண்டில் மட்டும் உள்ளது.

இன்ஃபினிக்ஸ் எஸ் 5 புரோ மாடல் 6.53 அங்குல முழு ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு 19.5: 9 என்ற விகிதத்தை கொண்டுள்ள இந்த மாடல் 2.5 டி வளைந்த கண்ணாடியை பெற்றதாக பாதுகாப்பினை வழங்குகிறது. மேலும் எஸ் 5 புரோ போனில் மீடியாடெக் ஹீலியோ P35 ஆக்டா கோர் கொண்ட இந்த மொபைல் சிப்செட் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கூடுதலாக 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக வழங்குகிறது.

பிரைமரி ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் குறைந்த வெளிசத்திற்கு என மற்றொரு கேமரா என மூன்று கேமராவினை கொண்டுள்ளது. பாப் அப் முறையில் எழும்பும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகின்றது.

இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ 4000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n மற்றும் புளூடூத் 5.0 ஆதரவினை பெற்றுள்ளது. ஃபேஸ் அன்லாக், பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் ஆகியவை கொண்டுள்ளது. இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான இயங்குதளத்தை கொண்டுள்ளது.

வரும் மார்ச் 13 ஆம் தேதி இன்ஃபினிக்ஸ் எஸ்5 புரோ மாடல் ரூ.9,999 விலையில் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்க உள்ளது.