ரூ.6,999க்கு மூன்று கேமராவுடன் இன்ஃபினிக்‌ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் அறிமுகம்

ஏப்ரல் 30 முதல் ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இன்ஃபினிக்‌ஸ் ஸ்மார்ட்  3 பிளஸ் மொபைல் போனில் மிக குறைவான விலையில் டிரிப்ள் கேமரா கொண்ட 4ஜி மொபைல் போன் மாடலாக விளங்குகின்றது.

சியான் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ள இன்ஃபினிக்‌ஸ் ஸ்மார்ட் 3 பிளஸில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பின்பற்றி வடிவமைக்கப்பட்ட அம்சங்களை கேமரா கொண்டுள்ளது.

இன்ஃபினிக்‌ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் விலை மற்றும் சிறப்புகள்

டிராப் நாட்ச் ஸ்கீரின் பெற்ற 6.21 அங்குல HD+ திரையுடன் 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் பெற்ற 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன், ஏஐ ஆதரவைப் பெற்ற டிரிப்ள் கேமரா செட்டப்பில்  13 மெகாபிக்சல் ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் f/1.8 aperture, 2 மெகாபிக்சல் செக்ன்டரி கேமரா மற்றும் லோ லையிட் சென்சார் உள்ளது.

ரூ.6,999க்கு மூன்று கேமராவுடன் இன்ஃபினிக்‌ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் அறிமுகம்

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 9 கொண்டு இயக்கப்பட்டு 2GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ A22 சிப்செட் உடன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பை பெற்றிருக்கின்றது.

டூயல் 4G VoLTE, ஒய்-ஃபை 802.11 a/b/g/n, ப்ளூடுத் 5.0, GPS + GLONASS, Micro-USB port மற்றும் 3500mAh பேட்டரி கொண்டதாக வந்துள்ளது.

Infinix Smart 3 Plus specifications

 • 6.21 அங்குல (1520 × 720 பிக்சல்) HD+ 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு
 • 2GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm processor with IMG PowerVR GE-class GPU
 • 2GB RAM, 32GB உள் சேமிப்பு,
 • 256GB உடன் microSD
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) with XOS 5.0
 • இரு சிம்
 • 13MP ரியர் கேமரா எல்இடி ஃபிளாஷ் f/1.8 aperture, 2MP செக்ன்டரி கேமரா மற்றும் Low-Light sensor
 • 8MP முன்புற கேமரா
 • கைரேகை சென்சார்
 • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
 • அளவிகள்: 157x76x7.8mm; எடை: 148g
 • டூயல் 4G VoLTE, ஒய்-ஃபை 802.11 a/b/g/n, ப்ளூடுத் 5.0, GPS + GLONASS, Micro-USB port
 • 3500mAh பேட்டரி

ரூ.6,999க்கு மூன்று கேமராவுடன் இன்ஃபினிக்‌ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் அறிமுகம்