ரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது

இன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும்.

6.1 இன்ச் எச்டி + டிராப் நாட்ச் பெற்ற மாடலில் 85% ஸ்கிரீன் டூ பாடி விகிதம் மற்றும் 500 நைட்ஸ் பிரகாசத்தை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ A20 குவாட் கோர் பிராசெஸருடன் 2ஜிபி ரேம் மூலம் 32 ஜிபி சேமிப்பை கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டினை 256 ஜிபி ஆதரவினை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தை அடிப்படையில் XOS 6.2 இயங்குதளத்தில் செயல்படுகின்றது. எல்இடி ஃபிளாஷ் உடன் 8 எம்பி பிரைமரி கேமரா ஆப்ஷனை கொண்டுள்ள இந்த மாடலில் 5 எம்பி முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் கைரேகை சென்சார் இணைக்கப்பட்டு, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 b / g / n (2.4GHz), புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யூஎஸ்பி உடன் வந்துள்ள இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 மாடலில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 மாடல் டோபஸ் ப்ளூ, குவார்ட்ஸ் கிரீன் மற்றும் அப்சிடியன் பிளாக் வண்ணங்களில் வருகிறது. இதன் விலை ரூ.5,999 ஆக பிளிப்கார்ட் மூலம் டிசம்பர் 24 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.