ஹாங்காங் மையமாக கொண்டு செயல்படும் டிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் (infinix) ஸ்மார்ட்போன் பிராண்டில் ஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 ப்ளஸ் மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பிரான்டு

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்

சீனாவை மையமாக கொண்டு செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் கோமியா (Comio) மற்றும் இன்பினிக்ஸ் ஆகிய இரண்டு சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் களமிறங்க உள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பிரான்டு

 

சமீபத்தில் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இன்பினிக்ஸ் வாயிலாக ஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 ப்ளஸ் ஆகிய மொபைல் நுட்ப விபரங்களை இங்கே காணலாம்.

ஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 பிளஸ்

ஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 பிளஸ் மொபைல்களில் முழு யூனிமெட்டல் பாடி பெற்றிருப்பதுடன் 5.98 முழு அங்குல ஐபிஎஸ் ஹெச்டி பெற்றிருப்பதுடன் 2.1GHz மீடியாடெக் ஹீலியோ X20 பிராசஸருடன், 2.5 டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு பெற்றதாக 4ஜிபிரேம் பெற்று 32ஜிபி மற்றும் 64ஜிபி என இரு விதமான உள்ளடங்கிய மெமரி பெற்றுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பிரான்டு

இந்நிறுவனத்தின் எக்ஸ்சார்ஜ் 4 ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடிய 4,000mAh பேட்டரி திறனுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் செயல்படுகின்ற இந்த மொபைலில் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்ற 20.7 மெகாபிக்சல் கேமரா பெற்றிருப்பதுடன், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்ற கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பிரான்டு

சீன சந்தையில் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 4 விலை $300 (ரூ. 19,300), மற்றும் ஜீரோ 4 ப்ளஸ் விலை $370 (Rs 23,800) ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here