ரூ.14,999 விலையில் Infinix Zero 8i மொபைல் 8ஜிபி ரேம், குவாட் கேமராவுடன் அறிமுகம்

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய இன்ஃபினிக்‌ஷ் ஜீரோ 8ஐ (Infinix Zero 8i) மொபைலில் 8 ஜிபி ரேம் பெற்று டூயல் செல்ஃபீ கேமராவுடன் , பிரைமரி ஆப்ஷனில் குவாட் கேமரா பெற்று ரூ.14,999 அறிமுக விலையில் கிடைக்க துவங்கியுள்ளது,

வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள ஜீரோ 8ஐ மொபைல் ஃபிளிப்கார்ட் மூலமாக வாங்கலாம். சில்வர் டைமண்ட் மற்றும் பிளாக் டைமண்ட் என இரு நிறங்களை கொண்டிருக்கின்றது.

Infinix Zero 8i சிறப்புகள்

இந்நிறுவனத்தின் உயர ரக மொபைலாக வெளியிடப்பட்டுள்ள ஜீரோ 8ஐ மாடல் 6.85 அங்குல எஃப்எச்டி + திரையுடன்  டூயல் ஹோல் டிஸ்ப்ளே கொண்டு 16 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-கேமரா பெற்ற செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் 90.1% ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனை மிக சிறப்பான முறையில் குளிர்விப்பதற்க்காக திரவ குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G90T SoC சிப்செட் உடன் 8ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்புடன் கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கஸ்டமைஸ் XOS 7.0 பெற்று பிரைமரி கேமரா பிரிவில் குவாட் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டு, 48 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி 119 ° அல்ட்ரா வைட் கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், AI கேமரா இணைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விருப்பங்களில் இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), புளூடூத் 5.0, GPS + GLONASS, USB Type-C ஆகியவற்றை கொண்டு 33W விரைவு சார்ஜிங் கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

மேலும், இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள லிக்யூடு கூலீங் டெக்னாலாஜி மூலம் 4°C ~ 6°C வெப்பத்தை தனிக்கின்றது.