இன்ஃபினிக்ஸ் முதல் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில்  அறிமுகம்

சீனாவை மையமாக கொண்டு இயங்கும் டிரான்மிஷன் ஹோல்டிங் நிறுவனமான இன்ஃபினிக்ஸ், தனது முதல் ஆண்டிராய்ட் ஒன் ஸ்மார்ட்போனான ஆண்டிராய்ட் ஒன் ஸ்மார்ட்போன் NOTE 5-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

வரும் 31ம் தேதி முதல் பிளிப்பார்ட்டில் கிடைக்கும் இந்த போன்கள், 3ஜிபி ரேம் 32 ஜிபி ஸ்டோராஜ் மற்றும் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோராஜ் என இரண்டு வகைகளில் கிடைக்கும் இந்த போன்களின் விலை முறையே 9,999 ரூபாய் மற்றும் 11,999 ரூபாயாகும். கூகிள் ஆண்டிராய்ட் ஒன், ஆபரேடிங் சிஸ்டம் கொண்ட இந்த போன்களின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், தொடர்ச்சியாக அப்டேட்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் முதல் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில்  அறிமுகம்

இதுகுறித்து பேசிய இன்ஃபினிக்ஸ் மொபைல் நிறுவன மேலாண்மை இயக்குனர் பெஞ்சமின் ஜியாங், இந்தியாவில் எங்கள் பிராண்ட் மொபைல்கள் கடந்த 2017ம் ஆண்டில் முதல் முறையாக அறிமுகமானது. இத தொடர்ந்து, இந்தியாவில் நல்ல எங்கள் மொபைல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், நாங்கள் இந்தியாவில் இகாமர்ஸ் பயணத்தை தொடர்ந்து வருகிறோம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள NOTE 5 ஆண்டிராய்ட் ஒன் ஸ்மார்ட்போன்கள், புதிய பெஞ்சமார்க்கை உருவாக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

புதிய இன்ஃபினிக்ஸ் NOTE 5 இல் 5.99 அங்குல FHD + திரையில் 18: 9 விகிதம், 16MP செல்பி கேமிரா, 4500mAh பேட்டரி மற்றும் 18W வேக சார்ஜ் செய்யும் வசதி கொண்டது. மேலும் இதில் 12MP பின்புற காமிரா, டுயல் LED பிளாஸ் மற்றும் 16MP செல்பி காமிராவும் கொண்டுள்ளது. மேலும் இது மீடியாடிக் ஹலோ P23 MT 6763 சிப் செட்டை அடிப்படையாக கொண்ட 16 நானோ மீட்டர் பிராசர்-ஐ கொண்டுள்ளது.