இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக அக்வா சீரிஸ் மொபைல் வரிசையில் இன்டெக்ஸ் அக்வா பவர் IV மொபைலை 4000mAh பேட்டரி பேட்டரி திறனுடன் ரூ.5,499 விலையில் வெளியிட்டுள்ளது.
இன்டெக்ஸ் அக்வா பவர் IV
சமீபத்தில் வெளிவந்த மோட்டோ சி பிளஸ் மொபைலுக்கு நேரடியான போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிசைன் & டிஸ்பிளே
5.5 அங்குல FWVGA தரத்தை கொண்ட 480×854 பிக்சல் திரையை பெற்றதாக வந்துள்ளது. பாலிகார்பனேட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுர வடிவிலான டிசைனுடன் கூடிய கருப்பு மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்க உள்ளது.
பிராசஸர் & ரேம்
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் பெற்ற இந்த மொபைலில் 1 ஜி.பி ரேம் வழங்கப்பட்டு 16 ஜி.பி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் கூடுதலாக 128 ஜி.பி வரை நீட்டிக்க இயலும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டை அக்வா பவர் IV மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
கேமரா துறையில் எல்இடி ஃபிளாஷ், ஃபேஸ் டிடெக்ஷன், HDR, பனோரேமா போன்றவற்றுடன் கூடிய மிக தெளிவான படங்களை வெளிப்படுத்தும் 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் படங்களை பெற 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி
ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற இன்டெக்ஸ் அக்வா பவர் IV மொபைலில் 4,000mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது.
மற்றவை
வைபை, புளூடுத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 4G LTE ஆதரவு போன்றவற்றை கொண்டதாகவும் உள்ளது.
விலை
ரூ. 5,499 விலையில் கிடைக்க உள்ள இன்டெக்ஸ் அக்வா பவர் IV அனைத்து ரீடெயிலர்களிடமும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.