ரூ.3,999 விலையில் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் கூடிய இன்டெக்ஸ் அக்வா ஜெனித் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.1ஜிபி ரேம் கொண்டு 5 மெகாபிக்சல் கேமராவை பெற்றுள்ளது.

விலை குறைந்த 4ஜி மொபைல் இன்டெக்ஸ் அக்வா ஜெனித் அறிமுகம்!

இன்டெக்ஸ் அக்வா ஜெனித்

நடுத்தர நகரங்கள் மற்றும் ஊரகப்பகுதிகளுக்கு ஏற்ற வகையில் விலை குறைந்த மொபைலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அக்வா ஜெனித் 4ஜி வோல்ட் ஆதரவு, ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

டிசைன் & டிஸ்பிளே

கருப்பு மற்றும் கோல்டு நிறத்தில் கிடைக்க உள்ள அகுவா ஜெனித் ஸ்மார்ட்போனில் 480×854 பிக்சல் தீர்மானத்தை பெற்ற 5 அங்குல சாதாரன திரை இடம்பெற்றுள்ளது.

பிராசஸர் & ரேம்

குவாட்கோர் மீடியாடெக் பிராசஸருடன் கூடிய 1ஜி.பி ரேம் வழங்கப்பட்டு 8 ஜி.பி வரையிலான உள்ளடக்க சேமிப்பு வசதியுடன் கூடிய விரிவாக்கும் வகையிலான சேமிப்பு 128ஜி.பி வரை வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைந்த 4ஜி மொபைல் இன்டெக்ஸ் அக்வா ஜெனித் அறிமுகம்!

கேமரா

செல்ஃப் டைமர், ப்யூட்டி மோட் உள்பட ஹெச்டிஆர் வசதி பெற்ற 5 மெகாபிக்சல் கேமரா எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் காணொலி அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் 2 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற இன்டெக்ஸ் அக்வா ஜெனித் மொபைல் 2300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

4G, VoLTE, 3G, வை-ஃபை , புளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளுடன் மிக குறைந்த 4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்ற ஸ்மார்ட்போனாக ஜெனித் விளங்குகின்றது.

விலை

ரூ. 3,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள இன்டெக்ஸ் அக்வா ஜெனித் மொபைல் ஷாப்க்லூஸ் இணையதளம் மேலும் அனைத்து முன்னணி ரீடெயிலர்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் கிடைக்க பெறும் என இன்டெக்ஸ் டெக்னாலாஜிஸ் அறிவித்துள்ளது.

சமீபத்தில் செல்ஃபீ படங்களுக்கு என பிரத்தியேகமான அக்வா செல்ஃபீ மொபைல் ஒன்றை இன்டெக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here